இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் உருவாவதாகக் கூறி கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை முதல் மிக கன மழை பொழியும் எனக் கணித்துள்ளது.
கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தென் மற்றும் மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்ததையடுத்து, 10 மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எஃப்) குழுக்களை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை, மே 21-ம் தேதி அனுப்பியது. 296 பணியாளர்களைக் கொண்ட எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் இந்த பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் உருவாகும் என்று கூறி இந்த பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என்று கணித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தின் தென்பகுதியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வர எஸ்.டி.ஆர்.எஃப் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாநில பேரிடர் மேலாண்மைத் துறை குறிப்பிட்டுள்ளபடி, பொது எச்சரிக்கை நெறிமுறை மூலம் மழை எச்சரிக்கைகள் குறித்து மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 2.44 கோடி மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. கனமழை மற்றும் மிகக் கனமழை முன்னறிவிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் தற்போது இந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“