ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கப் திருச்சி மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
எஸ்.டி.டி.யூ (SDTU) தொழிற்சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களிடத்தில் ஒரு தலைப்பட்ச நடவடிக்கை மூலம் மோதல் போக்கை உருவாக்கும் மாநகராட்சியையும், காவல்துறையும் கண்டித்து மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் முகமது வாசிக் தொகுத்து வழங்கினார். ஊடக பொறுப்பாளர் அல்லாபகஷ் வரவேற்புரை நிகழ்த்தி துவக்கி வைத்தார். மேலும், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையை அதிகாரிகளின் ஒருதலைபட்ச செயலை கண்டித்து மாவட்டத் துணைத் தலைவர் மீரான் மைதீன், எஸ்.டி.பி.ஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்ட துணை தலைவர் அப்பாஸ் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பொருளாளர் முகமது இலியாஸ் மற்றும் பாண்ட மங்கலம் கிளை தலைவர் காளிதாஸ் கண்டன கோசம் எழுப்பினார்கள்.
மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சர்க்கரை மீரான் இணைச் செயலாளர் தமிமுல் அன்சாரி அப்துல் சையது மற்றும் செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி ஷேக் அப்துல்லா கமால் பாஷா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சித்திக் மாவட்ட செயலாளர் மதர் ஜமால்,சதாம் உசேன் மற்றும் மாவட்ட கல்வியாளர் அணி தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா செயலாளர் பத்ரு ஜமான் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணைதலைவர் காஜா மொய்னுதீன் நன்றி கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்