scorecardresearch

சென்னை கடற்கரைகளில் கடல் பாம்புகள்: எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாவலர்கள் வேண்டுகோள்

பாம்புகள் நிலத்தில் உள்ள மற்ற பாம்புகளை விட 10 மடங்கு அதிக விஷம் கொண்டவை என்றாலும், அவை பொதுவாக சாந்தமான இயல்புடையவை

snake

சென்னை கடற்கரைகளில் கடல் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக, பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் பாம்பு ஆராய்ச்சியாளர்,பத்மநாபன், புளிகேட் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையேயான கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது, ​​13 வகையான கடல் பாம்புகளைப் பதிவு செய்தார்.

மேலும் பொதுவாக பிடிபடும் கடல் பாம்புகள் மூன்று வகைகள் ஆகும்: கொக்கி மூக்கு கடல் பாம்பு (என்ஹைட்ரினா ஸ்கிஸ்டோசா), (ஹைட்ரோஃபிஸ் சயனோசிண்டஸ்) மற்றும் மஞ்சள் கடல் பாம்பு (ஹைட்ரோஃபிஸ் ஸ்பைரலிஸ்).

இந்த பாம்புகள் நிலத்தில் உள்ள மற்ற பாம்புகளை விட 10 மடங்கு அதிக விஷம் கொண்டவை என்றாலும், அவை பொதுவாக சாந்தமான இயல்புடையவை என்றும், இதுவரை மீனவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ அல்லது மரணத்தை ஏற்படுத்தியதாகவோ பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடல் பாம்பு கடித்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு விஷ எதிர்ப்பு சீரம் கிடைப்பது அரிது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள ரீஃப் ஆராய்ச்சி மையம், கடல் பாம்பு கடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க விஷ எதிர்ப்பு சீரம் ஒன்றை உருவாக்கியுள்ளது என்றும் பத்மநாபன் கூறினார்.

கடல் பாம்புகள் பிடிபட்டால், அவை விஷத்தன்மை கொண்டவை என மீனவர்கள் மீண்டும் கடலில் வீசுகின்றனர். இருப்பினும், கரையில் உள்ள வலைகளை அகற்றும் போது, ​​சில சமயங்களில் அவற்றில் கடல் பாம்புகள் சிக்கியிருப்பதைக் கண்டு, அவை கரையிலேயே விட்டுவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லும்போது கவனத்துடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sea snakes increase in chennai sea shore 29th march

Best of Express