கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கடந்த 2007-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது, சென்னை விமான நிலையத்தை அடுத்து, மற்றொரு விமான நிலையத்தை அமைக்க, ஸ்ரீபெரும்புதூரில் 4000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அப்போதைய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன் பின் கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டம், 14 ஆண்டுகள் கழித்து தற்போது பேசு பொருளாகி உள்ளது.
2007-ம் ஆண்டிற்கு பிறகு, நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நிலத்தை கையகப்படுத்துமா என்பது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. திமுக வின் தேர்தல் வாக்குறுதியில், புதிய தொழில்துறை கொள்கையில் இரண்டாவது விமான நிலையம் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்ததே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
விமான நிலையத்தின் இருப்பிடத்தை உறுதி செய்ய, தொழில்நுட்ப ஆய்வு செய்யப்பட வேண்டும். இதனால், உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அரசு காத்திருக்கிறது. தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பின்னர், இந்த நோக்கத்திற்காக அதிகாரிகள் பரந்தூரில் 4,500 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
திமுக அரசு இரண்டாவது விமான நிலையத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க விரும்பிய நிலையில், அதன் பின் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. திமுக அரசு இதை கிடப்பில் போட்டதற்கான காரணம் பல இருந்தாலும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் அரசாங்கம் இழப்பீடு செலுத்த முடியாது. விமான நிலையத்திற்குத் தேவையான 3,000 ஏக்கர் நிலத்தில், மாநில அரசிடம் வெறும் 800 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. விமான நிலையம் அமைக்க மேலும் 2,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்.
இரண்டாம் விமான நிலையத் திட்டம் பல ஆண்டுகளாக காகிதத்தில்கிடப்பில் இருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டில் நிலம் கையகப்படுத்தல் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச்சட்டத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை ஆகியவை இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தின் படி, ஒரு ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையப்படுத்த வேண்டும் என்றாக், ரூ .3 கோடி செலவாகும்.
திமுக ஆட்சி மீண்டும் அமைய உள்ள நிலையில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தின் தேவையை புதிய அரசாங்கத்திடம் முறையிடும் என தெரிய வருகிறது.
ஜப்பான் நிறுவனமான ஜிகா தயாரித்த சென்னை-பெங்களூரு தொழில்துறை தாழ்வாரத்திற்கான விரிவான ஒருங்கிணைந்த முதன்மை திட்டம் என்ற அறிக்கையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் தேவை விரைவில் அதன் திறனை மீறக்கூடும் என்பதால் சென்னையில் கூடுதல் விமான நிலையம் அவசியம் என்று பரிந்துரைப்பதாக குறிப்பிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அபிவிருத்தி செய்ய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான காலத்தை கருத்தில் கொண்டு, இந்த விமான நிலையத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.