பரந்தூர் விமான நிலையம்: அவசியம் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

சென்னையின் 2ஆவது விமான நிலையம், பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

சென்னையின் 2ஆவது விமான நிலையம், பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; காரணத்தைக் கேட்டு அதிர்ந்த போலீஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு சென்னையில் பசுமை விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Advertisment

பரந்தூர் சென்னையின் மையப்பகுதி எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 68.5 கிமீ தொலைவில் உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு சாலை வழியாக 2 மணிநேரம் 20 நிமிடங்களில் செல்லாம்.

சென்னையின் முக்கிய இடங்கள் - பரந்தூர் இடையிலான தூரம்

எழும்பூர் ரயில் நிலையம்- பரந்தூர் : 67 கி.மீ
கிண்டி மெட்ரோ நிலையம் - பரந்தூர் : 72 கி.மீ
அடையாறு - பரந்தூர் : 76 கி.மீ
வேளச்சேரி - பரந்தூர் : 71 கி.மீ
அண்ணாநகர் - பரந்தூர் : 63 கி.மீ
நுங்கம்பாக்கம் - பரந்தூர் : 66 கி.மீ

பரந்தூர் புதிய விமானநிலையத்திற்கு கேப் (cab) மூலமாகவும், அரசுப் பேருந்து மூலமாவும் செல்லலாம்.

Advertisment
Advertisements

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பரந்தூர் கிராமம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 1,328.11 ஹெக்டேர். பரந்தூரில் 2,556 மக்கள் வசிக்கின்றனர். 58.88% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

Chennai Tamilnadu Parliment Of India Airport

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: