சிலை கடத்தல் பிரிவு போலீசார் சென்னை சைதாப்போட்டையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் தொடர்ந்து 2 ஆவது நாளாக அதிரடி சோதனை நடைப்பெற்று வருகிறது.
சிலைக் கடத்தல் பிரிவு போலீசார்:
கடந்த சில மாதங்களாக அரசியல் தலைவர்களால் அதிகம் கவனிக்கப்படும் வழக்கு சிலைக் கடத்தல். தமிழகத்தில் இருக்கும் பிரசித்துப் பெற்ற கோயில்களில் வரலாற்று மிக்க ஐம்பொன் சிலைகள் காணாமல் போனதாக வெளியான குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிலைக் கடத்தல் பிரிவு போலீசார் திவீர வேட்டையில் இறங்கினார்.
இந்த சிலைக் கடத்தல் வழக்கில் கடந்த ஆண்டு தீனதயாளன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த டையிரில் பல்வேறு முக்கிய தொழிலதிபர்களின் பெயர்கள் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிலைக்கடத்தல் குறித்த ஆய்வு மேற்கொண்டார். கடந்த 3 மாதத்தில் மட்டும் தமிழக கோயில்களில் இருந்து காணாமல் போன சிலைகள் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் நேற்றைய தினம், சைதாப்பேட்டையிலுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 60 சிலைகள் கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த சில முக்கியமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த சோதனை இன்றும் தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவர றிமுதல் செய்யப்பட்ட மொத்த சிலைகளின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி சோதனைக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.