/indian-express-tamil/media/media_files/2025/08/20/whatsapp-image-2025-08-20-a-2025-08-20-11-23-59.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு, மதுரை அருகே பாரபத்தி பகுதியில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த முறை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே 506 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர 200 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டர்களை நேரடியாக சந்திக்க விஜய் நடந்து செல்ல 300 மீட்டர் நீள நடைமேடை (ரேம்ப் வாக்) அமைக்கப்பட்டுள்ளது.
மாநாடு நாளை பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை நடைபெறும். காலை கலை நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி ஏற்பு, கொள்கை விளக்கப் பாடல், தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவை நடைபெறவுள்ளன. 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தலைவர் விஜய் கட்சி கொடியை ஏற்றுகிறார். பின்னர் தொண்டர்களை சந்தித்து உரையாற்றுகிறார்.
மாநாட்டு திடலில் இரவு பகலாக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் மதுரைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டின் இறுதி ஆய்வுக்காக தலைவர் விஜய் மதுரைக்கு வந்தார். மாலை நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, மாநாடு நிறைவு பெறும் வரை மதுரையிலேயே தங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.