சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையே வழக்கமான வந்தேபாரத் ரயில் சேவை ஏப்ரல் 5, அதாவது இன்று தொடங்கிறது.
சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கடந்த மார்ச் 12ம் தேதி தொடங்கி வைத்தார். மைசூரு, ரயில்வே நிலையத்தில் வந்தா பாரத் ரயிலை பராமரிக்க வசதிகள் இல்லாமல் இருந்ததால், எஸ்.எம்.வி.டி பெங்களூரு வழியாக சென்னை வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. கடந்த மார்ச் 14 முதல் ஏப்ரல் 4 வரை இந்த வழியில்தான் ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் ரயில் மைசூரு முதல் சென்னை வரை இயக்கப்படுகிறது. கே.ஸ்.ஆர் பெங்களூரு வழியாக இயக்கப்படுகிறது. ஏப்ரல் 5 முதல் ஜூலை 29 வரை இந்த ரயில் இயக்கப்படும். அதுவரை புதன்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படாது. ஜூலை 30 முதல், வியாக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படாது.
இந்நிலையில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் இரண்டாவது இரயில் இதுவாகும். முதல் ரயில் ( 20607/20608) நவம்பர் 2022 முதல் இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும், இரண்டாவது வந்தே பாரத் ரயில், மைசூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, சென்னை செண்ட்ரல்-க்கு மதியம் 12.25 வந்தடையும். அதுபோல சென்னை செண்ட்ரல் மாலை 5 மணிக்கு விடைபெறும், மைசூருக்கு இரவு 11.20 மணிக்கு சென்றடையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“