அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு 2024 ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தத் தேர்வுக்கான அறிவிப்பானை 2024 பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி மாதம் ஆன்லைனில் திறக்கப்பட்டன. மார்ச் 15ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் திறந்து இருந்தன.
பொதுப் பிரிவு வினாத்தாளில் 150 வினாக்கள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெற 60ம், இதர பிரிவினர் தேர்ச்சி பெற 45ம் எடுக்க வேண்டும். மேலும், இந்த போட்டித்தேர்வை டெட் முதல் தாள் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும்.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக போட்டி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு தற்போது ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“