காலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா? தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு
Secretariat's Staffs Opposed to Bio-Metric Attendance: காலம் நேரம் பார்க்காமல் பணிபுரியும் தங்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு பொருந்தாது என்று தலைமைச் செயலக ஊழியர்கள் பயோ மெட்ரிக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Secretariat's Staffs Opposed Bio-Metric Attendance, Bio-Metric Attendance Tamilnadu government office, பயோமெட்ரிக் வருகைப்பதிவு, தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு, Bio-Metric Attendance, Bio-Metric Attendance in Secretariat office, Bio-Metric, Tamilnadu Secretariat's Staffs,
Secretariat's Staffs Opposed to Bio-Metric Attendance: காலம் நேரம் பார்க்காமல் பணிபுரியும் தங்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு பொருந்தாது என்று தலைமைச் செயலக ஊழியர்கள் பயோ மெட்ரிக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Advertisment
பள்ளிகள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வரும் நேரத்தைக் கண்காணிக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை தலைமைச் செயலகத்திலும் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அண்மையில் அனைத்து அரசுத்துறை செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை மற்றும் பணி முடிந்து புறப்படும் நேரத்தை கண்காணிக்க பயோ மெட்ரிக் கொண்டுவருவதற்கு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு சில அரசுத்துறை செயலர்களில் ஆதரவும் மற்ற சில செயலர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
பகலில் சமூக சேவையாக ட்ராஃபிக் ரெகுலேட்டர்,இரவில் மருத்துவமனையில் வேலை..முன்னுதாரணமாக செயல்படும் 55 வயது பெண்மணி
Advertisment
Advertisements
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவுமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தலைமைச் செயலக ஊழியர்கள் கூறுகையில், “நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நேரங்களில் பகல் இரவு என்று நேரம் காலம் பார்க்காமல் இரண்டு மூன்று மாதங்களாக கடுமையாக பணிபுரிகிறோம். இந்த சூழலில் பள்ளிகள் மற்ற அரசு அலுவலகங்களில் இருப்பதுபோன்று தலைமைச் செயலகத்திலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை கொண்டுவந்தால் ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வருவதோடு நேரம் முடிந்தவுடன் பயோமெட்ரிக்கில் பதிவு செய்துவிட்டு புறப்பட்டுச் செல்லும் மனநிலைதான் ஏற்படும். ஏற்கெனவே தலைமைச் செயலக ஊழியர்கள் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு இல்லாவிட்டாலும் அவர்கள் சரியான நேரத்துக்குதான் வருகின்றனர். வேலை நேரம் முடிந்தும் கூட அவர்களுடைய பணிகளை முடித்துவிட்டுத்தான் செல்கின்றனர். அதனால், தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை கொண்டுவருவது பொருத்தமாக இருக்காது. தற்போது இருக்கும் நடைமுறையே தொடர்ந்திட வேண்டும்” என்று தெரிவித்தனர்.