scorecardresearch

ராமநாதபுரம்- செக்ந்திராபாத் சிறப்பு ரயில்: ஜூன் வரை இயக்கப்படும்: தேதி மற்றும் நேரப் பட்டியல் இதோ

ராமநாதபுரம்- செக்ந்திராபாத் சிறப்பு ரயில், வரும் ஜீன் 28 வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம்- செக்ந்திராபாத் சிறப்பு ரயில்: ஜூன் வரை இயக்கப்படும்: தேதி மற்றும் நேரப் பட்டியல் இதோ

ராமநாதபுரம்- செக்ந்திராபாத் சிறப்பு ரயில், வரும் ஜீன் 28 வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

செக்ந்திராபாத்- ராமநாதபுரம் ஸ்பெஷல் ரயில் ( ரயில் எண்: 07695) மார்1 முதல்  ஜூன் 28 வரை நீடிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் புதன்கிழமைகளில்   இயக்கப்படும். இந்த ரயில் செக்ந்திராபாத்திலிருந்து புதன்கிழமை இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு ராமநாதபுரம் செல்லும்.

இந்த ரயில் ஆனது  மார்ச் 1, 8, 15, 22, 29 , ஏப்ரல்- 5, 12, 19, 26, மே- 3, 10, 17, 24, 31,       ஜூன் 7, 14, 21,  28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

இதுபோல ராமநாதபுரம்- செக்ந்திரபாத் ஸ்பெஷல் ரயில் ( ரயில் எண்: 07696) மார்ச்3 முதல் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில்கள் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 9.50க்கு கிளம்பி  நள்ளிரவு 12.50 செல்லும்.

இந்த ரயில் ஆனது மார்ச் 3, 10, 17, 24, 31, ஏப்ரல்- 7, 14, 21, 28, மே- 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Secunderabad ramanathapuram special train extended