சீனாவிலிருந்து கராச்சிக்கு தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள்; காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பறிமுதல்

அதிகாரிகளின் கருத்துப்படி, பாகிஸ்தான் தனது எல்லா சூழ்நிலையிலும் நட்பு நாடாகக் கருதும் சீனாவின் உதவியுடன் ரசாயன தாக்குதல் மற்றும் உயிரியல் போர் திட்டத்தில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் கருத்துப்படி, பாகிஸ்தான் தனது எல்லா சூழ்நிலையிலும் நட்பு நாடாகக் கருதும் சீனாவின் உதவியுடன் ரசாயன தாக்குதல் மற்றும் உயிரியல் போர் திட்டத்தில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
containers

சீன நிறுவனமான செங்டு ஷிசென் டிரேடிங் கோ. லிமிடெட், ராவல்பிண்டியை தளமாகக் கொண்ட பாதுகாப்புத் தளவாட சப்ளையரான ரோஹைல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஆர்த்தோ-குளோரோ பென்சிலைடின் மலோனோனிட்ரைல் என்ற சரக்குகளை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (Representational/File)

சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்த அதிரடிப் படையினரால் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் அடங்கிய, சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சரக்குகளை தமிழ்நாட்டிலுள்ள துறைமுகத்தில் பாதுகாப்பு முகமைகள் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Security agencies seize Karachi-bound consignment of banned chemicals from China at TN port: Report

அதிகாரிகளின் கருத்துப்படி, பாகிஸ்தான் தனது எல்லா சூழ்நிலையிலும் நட்பு நாடாக இருக்கும் சீனாவின் உதவியுடன் ரசாயன தாக்குதல் மற்றும் உயிரியல் போர் திட்டத்தில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

சீன நிறுவனமான செங்டு ஷிசென் டிரேடிங் கோ. லிமிடெட், ராவல்பிண்டியை தளமாகக் கொண்ட பாதுகாப்புத் தளவாட சப்ளையரான ரோஹைல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஆர்த்தோ-குளோரோ பென்சிலைடின் மலோனோனிட்ரைல் என்ற சரக்குகளை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

சுமார் 2560 கிலோ எடையுள்ள இந்த சரக்கு, தலா 25 கிலோ எடையுள்ள 103 டிரம்களில் நிரப்பப்பட்டு, ஏப்ரல் 18, 2024 அன்று, சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில், ஹூண்டாய் ஷாங்காய் (சைப்ரஸ் கொடியின் கீழ் பயணம்) என்ற சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டது.

கராச்சி செல்லும் இந்த கப்பல் மே 8-ம் தேதி 2024-ல் தமிநாட்டில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அடைந்தது.

இந்தியாவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலான ‘SCOMET’-ன் கீழ் இந்த ரசாயனத்தின் பெயர் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாகக் குறிப்பிடப்பட்டதால், வழக்கமான சோதனையில் சுங்க அதிகாரிகள் சரக்குகளை தடுத்து வைத்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிபுணர்களின் உதவியை நாடிய பின்னர், ரசாயனத்தை ஆராய்ந்த பிறகு, அது ஆர்த்தோ-குளோரோ பென்சிலிடின் மலோனோனிட்ரைல் (சி.எஸ்) என்பது வாசெனார் ஏற்பாட்டின் கீழ் பட்டியலிடப்பட்ட பொருளாகும்.

வாசெனார் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டாலும், சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திடவில்லை.

இதைத் தொடர்ந்து, ரசாயனப் பொருட்கள் சுங்கச் சட்டம், 1962, மற்றும் ஆயுதங்கள் பெருமளவு அழிவு மற்றும் விநியோக முறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தடை) சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் மும்பையின் நாவா ஷேவா துறைமுகத்தில் பாதுகாப்பு முகமைகள் சீனாவிலிருந்து கராச்சி நோக்கிச் செல்லும் கப்பலில் பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட இரட்டைப் பயன்பாட்டு சரக்குகள் எடுத்துச் சென்றதைக் கண்டறிந்து அதைக் கைப்பற்றினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: