பிரதமர் நரேந்திர மோடி நாளை கோயம்புத்தூரில் நடைபெறும் சாலை வாகனப் பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக, கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள கவுண்டம்பாளையம் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர காவல் துறையோடு இணைந்து மத்திய பாதுகாப்பு குழுவினரும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மாலை 5.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர், 5.45 மணிக்கு கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து வாகன பேரணியை துவங்குகிறார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி ஆர்
எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது.
இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர், செவ்வாய்க்கிழமை காலை கேரளா புறப்படுகிறார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“