Advertisment

சேடப்பட்டி முத்தையா மரணம்: ஜெயலலிதா விசுவாசியாக பெயர் பெற்றவர்

former speaker sedapatti muthiah passed away Tamil News: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 76) உடல்நலக்குறைவால் காலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sedapatti muthiah passed away

sedapatti muthiah

Sedapatti Muthiah Tamil News: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 76) உடல்நலக்குறைவால் மதுரை திருமங்கலம் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Advertisment

1945 ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி டி.குண்ணத்தூர் அருகில் உள்ள முத்தப்பன்பட்டியில் பிறந்தார் முத்தையா. சேடபட்டி சட்டசபைத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றதால் சேடபட்டியார் என்று அழைக்கப்பட்டார். எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் சேடபட்டி முத்தையா. சேடபட்டி செல்லப்பிள்ளை என்று தொகுதி மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக பதவி வகித்தார்.

சேடப்பட்டி முத்தையா 1977, 80, 84, 1991 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். இவர் 1991 முதல் 1998 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சேடப்பட்டி முத்தையா, அதிமுகபொருளாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.பியாகவும் இருந்துள்ளார். சேடப்பட்டி முத்தையாவின் இல்லத் திருமண விழாவில் ஜெயலலிதா பேசிய போது, 'விசுவாசத்திற்கு மறுபெயர் சேடப்பட்டி முத்தையா என்று பாராட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வென்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த அரசில் கப்பல் மற்றும் போக்குவரத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

publive-image

தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த இவர் 2006-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்.

மதுரை திருமங்கலத்தில் வசித்து வந்த சேடபட்டி முத்தையாவிற்கு கடந்த சில வாரங்களாகவே உடல் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சேடப்பட்டி முத்தையாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். சேடபட்டி முத்தையா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது சொந்த ஊரான மதுரை, சேடப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அவரது இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu Dmk Aiadmk Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment