காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் தேனியில் வைத்து நேற்று கைது செய்தனர். இவர் சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து, தேனியில் அவரது காரை சோதனை செய்த போலீசார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும் கூறினர். இதையடுத்து அவர் மீது கஞ்சா வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோத்திதாச பண்டிதர் நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்துவதாக கூறினார். தொடர்ந்து அவரின் நோக்கங்களை நிறைவேற்ற நாங்கள் பயணிப்போம். நாம் தமிழர் கட்சி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது என்றார்.
மேலும், சவுக்கு சங்கர் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, உயர் காவல் அதிகாரி டி.ஜி.பி அருண், பெண் போலீசார் பற்றி சவுக்கு சங்கர் பேசியது தவறு. அதை அவர் பேசியிருக்க கூடாது. தவிர்த்திருக்க வேண்டும். இந்த புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். தொடர்ந்து கஞ்சா வழக்கு குறித்து கேட்டபோது, கஞ்சாவை அரசாங்கம் தான் விற்பனை செய்கிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“