திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான் இன்று ஆஜரானார். மேலும் டிஐஜி வருண்குமாரும் ஒரே நேரத்தில் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்பு ஆஜராகினர்.
இருவரையும் காத்திருக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். இந்த நிலையில், நீதிமன்ற வாசலில் சீமான் மற்றும் டிஐஜி வருண்குமார் ஆகியோரை படம் எடுக்க காத்திருந்த புகைப்பட கலைஞரின் கேமிராவை நீதிபதி பறிமுதல் செய்ய உத்தரவிட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து செய்தியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதியிடம் மனு அளித்து நீதிமன்ற வழிகாட்டு நடைமுறைப்படி நீதிமன்ற வாசலில் காத்திருந்த புகைப்பட கலைஞரின் கேமராவை மீட்டுத் தருமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்