உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட சீமான்; வைரல் வீடியோ

திருவொற்றியூர் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவறுதலாக திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Seeman asks vote to dmk udhayasuriyan, seeman, dmk, naam tamilar katchi, உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட சீமான், சீமான், வைரல் வீடியோ, நாம் தமிழர் கட்சி, Seeman asks vote to dmk udhayasuriyan video, tamil nadu assembly elections 2021

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, தவறுதலாக திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் சீமான் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசுவதைக் குறிப்பிட்டு நகைச்சுவையாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை பிரசாரம் செய்யும் நேரம் முடிவடைகிறது. அதனால், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 50% அதாவது 117 தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த சீமான், பின்னர், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், நேற்று திருவொற்றியூர் தொகுதியில் வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான், தவறுதலாக, திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டு அவருடைய கட்சியின் விவசாயின் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். சீமான் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சீமான் பேசியிருப்பதாவது: “என் அன்புக்குரிய சொந்தங்கள், என் அருமை உடன் பிறந்தார்கள், பெருங்கனவோடு நிற்கிற இந்த பிள்ளைகள், எளிய மக்கள் உங்களின் பிள்ளைகள் எங்களுக்கு உதயசூரியன் வாக்களியுங்கள்” என்று கூறினார். பின்னர், தவறுதலாக பேசுவதை உணர்ந்த சீமான், உடனடியாக திருத்திக்கொண்டு விவசாயிகள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார். மேலும் தனக்கு திருவொற்றியூர் தொகுதியில் விவசாயிகள் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சி சீமான் இப்படி தவறுதலாக, திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள், அரசியல் பகடி செய்யும் சமூக ஊடக வாசிகள், சீமானைக் நகைச்சுவையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Seeman asks vote to dmk udhayasuriyan video

Next Story
செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு: ரவுண்ட் கட்டும் ஐடிIT raid at Senthil Balaji house, IT raid in DMK cadidate Senthil Balaji house, income tax raid in sabareesan house, வருமானவரி சோதனை, திமுக, செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு, கரூர், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை, சபரீசன், mk stalin, it raid in karur senthil balaji house, income tax raid, it raid
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express