/indian-express-tamil/media/media_files/2025/01/24/hHorczCPEXXMwEeLBzHm.jpg)
நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்த நிலையில், கோவையில் சீமான் செய்தியாளர்களை சந்திப் பேசினார்.
நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்த நிலையில், கோவையில் சீமான் செய்தியாளர்களை சந்திப் பேசினார். இது தொடர்பான விபரம் பின்வருமாறு:
செய்தியாளர்கள் கேள்வி: நாம் தமிழர் கட்சியிலிருந்து 3000 பேர் தி.மு.க-வில் இணைவதாக கூறுகிறார்களே?
சீமான்: தி.மு.க-வையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டி இருக்கிறது.
செய்தியாளர்கள் கேள்வி: நாம் தமிழர் கட்சியினர் அறிவாலயத்தில் திமுகவில் இணையும் நிகழ்வில்,பெரியாரை தவறாக பேசக்கூடியவர்கள் இழி பிறவிகள் என்று துரைமுருகன் கூறி இருக்கிறாரே?
சீமான்: அவர் என்னைச் சொல்லவில்லை பேரறிஞர் அண்ணா மற்றும் அவர்களுடைய தலைவர் கருணாநிதி பற்றி கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் நாங்கள் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை. திராவிடக் கழகத்திலிருந்து தி.மு.க பிறந்ததற்கான காரணம் என்ன? அவரே கூறியிருக்கிறார். பெரியார் எங்க ஊரு வேலூருக்கு வந்தார். மணியமையை கூட்டிக்கொண்டு போனார், மணியம்மையை திருமணம் செய்தார். அதிலிருந்து அண்ணா வெளியே சென்றார். மணியம்மை மற்றும் பெரியாரின் திருமணத்தில் பிறந்தது தான் தி.மு.க என்று கூறினார்.
கருணாநிதி பெரியாரை விமர்சித்து பேசியதில், நாங்கள் துளி கூட பேசவில்லை. அதனால் துரைமுருகன் அவர்கள் இருவரையும் தான் கூறுகிறார். என்னை சொல்லவில்லை. சீமானை சொல்கிறேன் என்று அவர் சொல்லவில்லையே. இதை நான் வரவேற்கிறேன்.
செய்தியாளர்கள் கேள்வி: பிரபாகரன் குடும்பத்தில் இருந்தும், புலிகள் தரப்பிலிருந்தும் சீமான் சொல்வது பொய் என்று கூறுகிறார்களே?
சீமான்: பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது. இலட்சிய உறவு தான். இலட்சிய உறவு என பார்த்தால் இந்த மண்ணில் முதலில் போராடி செத்தவன் தான். அவரின் இலட்சியத்திற்காக நிற்கிற நாங்கள் எல்லாரும் தான் அவரின் உறவு. பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை, உலகெங்கும் இருக்கும் என் சொந்தங்கள் பதில் சொல்லிவிடுவார்கள் உங்களுக்கே தெரிய வரும்.
செய்தியாளர்கள் கேள்வி: கார்த்திக் மனோகரன் நீங்கள் பிரபாகரனை சந்தித்து இருந்தாலும் மதிவதனையை சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறாரே?
சீமான்: நான் பிரபாகரனையே சந்திக்கவில்லை என்கிறார் ஒருவர். நான் பத்து நிமிடம் சந்தித்தேன் என்கிறார் ஒருவர். 8 நிமிடம் சந்தித்தேன் என்கிறார் ஒருவர். மேலும் ஒருவர் அவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படமே பொய் என்கிறார். நீங்கள் எதை நம்புகிறீர்கள்? நான் எங்கள் அண்ணன் பிரபாகரனையே சந்திக்கவில்லை என்று கூறுகிறேன். நீங்கள் எதை நம்புகிறீர்கள்.
செய்தியாளர்கள் கேள்வி: நீங்கள் ஏ டீமா, இல்லை பி டீமா?
சீமான் நான் பி -டீம்தான் , ஏனென்றால் ஏ-டிமில் தி.மு.க இருக்கிறது.. அதனால் நாங்கள் பி டீமில் இருக்கிறோம். பி.ஜே.பி-யின் ஏ-டீம் தி.மு.க, பி-டீம் நாங்கள்.
செய்தியாளர்கள் கேள்வி: பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் பொய் என்று கூறுவதை, உண்மை என்ன என நிரூபிக்க ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்பதை நீங்கள் ஏன் முன்மொழிவதில்லை?
சீமான்: நான் யாருக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது? எனக்கு மற்றவர்களுக்காக நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை அவசியமும் இல்லை. அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை சந்திக்கவே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
செய்தியாளர்கள் கேள்வி: நீலாங்கரை பகுதியில், நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்களே?
சீமான்: நாம் தமிழர் கட்சியினர் உருட்டுக்கட்டைகளோடு இருந்ததாக கூறுகிறார்கள், இதில் துப்பாக்கியை ஏன் விட்டீர்கள்? துப்பாக்கி வெடிகுண்டு அனைத்தையும் இணைத்து வழக்கு போடச் சொல்லுங்கள். (சிரிக்கிறார்)
செய்தியாளர்கள் கேள்வி: டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்து இருக்கிறார்கள். இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?
டங்டன் சுரங்கம் ரத்து செய்யப்படும் என்பது எனக்கு நிச்சயமாக தெரியும். மக்களுக்கு என்று ஒரு படை இல்லை என்றால் மக்களுக்கு ஒன்றுமே இல்லை என்பது போல இல்லை. இந்த மண்ணில் மக்களுக்கு என்று ஒரு படை இருக்கிறது. நாம் தமிழர் என்ற புரட்சி படை இருக்கிறது. உன்னால் ஒரு படி மண்ணை கூட எடுக்க முடியாது என்று நான் அன்றே கூறினேன். தன்னெழுச்சியாக மக்கள் கிளர்ந்து போராடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. பா.ஜ.க நிறுத்தியது என்றால், அந்த
திட்டத்தை கொண்டு வந்தது யார்?
பெரியார் என்னென்ன பேசினார் என்பதை பேச வேண்டும், பெண்களுக்கு தாலி ஒரு அவமான சின்னம், அதை அருத்தறிய சொன்னார். நாங்கள் அருத்தெறிந்தோம். கற்பப்பை ஒரு அடிமை சின்னம், நீ பிள்ளை பிறக்கும் இயந்திரம் இல்லை, அதை அருத்தெறிய வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்., அதைக் கூற வேண்டும். கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, வணங்குகிறவன் அயோக்கியன், தமிழ் ஒரு சனியன், அதை விட்டொழியுங்கள் அது ஒரு காட்டுமிராண்டி மொழி, தமிழ் பேசுகிறவன் முட்டாள். இதையெல்லாம் பெரியார் பெருமையாக பேசுகிறார் என்பதை பேச வேண்டும்.
துணிவு மிக்க ஆண் மக்கள், பெரியாரின் பெரும் தொண்டர்கள், வழிபாட்டாளர்கள், அங்கு வந்து பேச வேண்டும் சீமான் பெரியாரை திட்டி விட்டார், பெரியாரை இழிவாக பேசிவிட்டார்.. அதனால் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என அங்கு வந்து சொல்ல வேண்டும் என கூறினார். நீங்கள் சரியான வீரமிக்கு ஆண்மகனாக இருந்தால் பெரியாரைப் பற்றி பேசி ஓட்டு கேட்க வேண்டும். அங்கு பெரியாரை விட்டுவிட்டு ஓட்டு கேட்டால் பிஞ்ச செருப்பை வைத்து பிச்சு புடுவேன்.
பெரியாரை எதிர்த்து தானே கட்சியை ஆரம்பித்தீர்கள், எந்த இடத்தில் உங்களுக்கு கொள்கைகள் இருக்கிறது. ஆரிய ராஜாஜியின் துணை இல்லாமல் தி.மு.க அரியணையில் ஏறியது . நீங்கள் என்ன ஆண்மக்கள் ஆரியரை எதிர்க்கிறீர்கள். ஆரிய படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் பேரன் நான். இந்தத் திருட்டு திராவிட படையை கடக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும் எனக்கு. 32 இயக்கங்கள் சேர்ந்து ஒரு 150 பேரை கூட்ட முடியவில்லை, இதெல்லாம் ஒரு இயக்கம். என்னுடைய தலைவனை எதிர்த்து 20 நாடுகள் சேர்ந்து சண்டையிட்டன.
இத்தனை கட்சியை கூட்டிக்கொண்டு ஒத்த பயலை உன்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை. சூரியன் உதித்தால் தான் உலகத்திற்கு விடுவு. ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழ் சமூகத்திற்கு விடுவு.
இவ்வாறு சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.