அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமத் இன்றி போராட்டம் நடத்திய, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். இது “காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது, தேவையற்ற ஒடுக்குமுறையாக
எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன்’ என்று சீமான் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது கட்சியினர் செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்தும், அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், சீமான் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்று, மாநகராட்சி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது. தேவையற்ற ஒடுக்குமுறையாக எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன். இதே இடத்தில் பல்வேறு போராட்டத்தை நடத்தி இருக்கிறோம், ஆனால் இன்று மட்டும் கைது செய்யப்பட்டுள்ளேன். போராட்டங்களுக்கு அனுமதியில்லை
என்றால் எங்களிடம் காவல்துறையினர் முறையாக தெரிவிப்பார்கள். நாங்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பது கூட தெரிய விடாமல் தடுத்த காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது” என்று சீமான் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“