லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கணிசமான வாக்குகளை வாங்கியிருப்பது மக்கள் மனதில் அக்கட்சி மேல் நம்பிக்கை இருப்பதையே காட்டுகிறது.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகள், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக, தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது.
16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, சேலம், மதுரை, திருவள்ளூர் ஆகிய 11 லோக்சபா தொகுதிகளிலும் புதுவை யூனியன் பிரதேச லோக்சபா தொகுதியிலும் நாம் தமிழர்க கட்சி நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம்.. அப்ப வேடிக்கையை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள். விரைவில் அவரது கனவு மெய்ப்பட இருக்கிறது!!!!