Advertisment

மதுரை: அருந்ததியர் சமூகம் பற்றி சீமான் சர்ச்சை கருத்து; உருவ பொம்மை எரித்த 5 பேர் கைது

மதுரையில் சீமானின் உருவ பொம்மையை எரித்த தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
seeman effigy burning at Madurai, 5 got arrested Tamil News

Members of Tamil Puligal Katchi burnt the effigy of Naam Tamilar Katchi (NTK) leader Seeman in Madurai Tamil News

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு நடந்த பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக தமிழ் புலிகள் கட்சியினர், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக கண்ட போராட்டம் நடத்தினர். இந்த போராட்ட்டத்தின் போது, அவரது உருவ பொம்மையையும் எரித்தனர்.

Advertisment

இதனையடுத்து, போராட்ட களத்திற்கு விரைந்த மதுரை தல்லாகுளம் போலீசார் அங்கு சென்று தீயை அணைத்தனர். மேலும், தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

publive-image

இதேபோல், நெல்லையில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நீதிமன்றம் எதிரே உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் முன்பு ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் திடீரென சீமானின் இரண்டு உருவ பொம்மைகளை எரித்தனர்.

publive-image

தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று தீயை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள், ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பட்டியலின மக்களை சீமான் அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதேபோல், திராவிட தமிழர் கட்சி திருக்குமரன் தலைமையில், நிர்வாகிகள் வண்ணார்பேட்டையில் சீமான் உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட நிதி செயலாளர் தமிழ்மணி தலைமையில், நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Naam Tamilar Katchi Seeman Madurai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment