Advertisment

தஞ்சை பெரிய கோவிலில் தேவாரம் பாடாதது ஏன்? சீமான் கேள்வி

தஞ்சை பெரிய கோவிலில் தேவாரம் பாடாதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பினார்.

author-image
WebDesk
May 27, 2023 20:40 IST
Seeman hoisted Naam Tamilar Party flag in Thanjavur

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். தொடர்ந்து, தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் 65 அடி உயர கொடி கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் புலி கொடியை ஏற்றி வைத்தார்.

Advertisment

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “டாஸ்மாக்கில் குடித்தது மது அல்ல சைனட் என மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். டாஸ்மாக் மதுபானம் சாமானிய மனிதர்களால் குடிக்க முடியாததால் தான் குறைந்த விலைக்கு கிடைக்க கூடியதை தேடி அழைகிறார்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போதைய முதல்வர் ஸ்டாலின்,

கனிமொழி உள்ளிட்ட அனைவரும் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மார்க்கை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் இதுவரை வாய் திறக்கவில்லை. செங்கோல் கொடுத்தது என்பது ஒரு ஏமாற்று வேலை.

செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை ஏன் உள்ளே வைக்காமல் கோயில் வெளியே நிறுத்தி உள்ளீர்கள்.

ராஜராஜ சோழன் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினான். ஆனால், தற்பொழுது குடியாட்சியில் முடியாட்சி நடக்கிறது அதுவும் கொடுங்கோல் ஆட்சியாக நடக்கிறது.

செங்கோலை கொடுக்கும்போது ஆதீனங்கள் தேவாரம் பாடும் போது ஏன் இன்னும் பெரிய கோவிலில் உள்ளே பாடவில்லை ஒரு வேளையாவது பாடச் சொல்லுங்கள்.

வருமான வரித்துறை சோதனையில் இரு தரப்பிலுமே தவறு உள்ளது. மேலும் செந்தில் பாலாஜி கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால் வருமானவரித்துறை சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூற வேண்டியது தானே.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய ரசிகர்கள் இதுபோல் முற்றுகை செய்திருந்தால் எப்படி சோதனை செய்திருக்க முடியும்.

இதேபோல் எத்தனையோ அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. அனைவருமே பண பலம் படைத்தவர்கள் இது போல் யாரும் செய்தது கிடையாது. அதிகாரமும் அதிகாரமும் மோதுகிறது பேய்க்கும் பேய்க்கும் சண்டை போல நம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Ntk #Seeman #Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment