மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணியை அறிமுகம் செய்து வைத்தபோது, நா.த.க தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு தெரிவித்தனர்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயாக நாட்டின் மாபெரும் தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளத்து.
தமிநாட்டில், இந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என 3 கூட்டணிகள் மோதுகின்றன. இந்த தேர்தலிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னரே, மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முதலில் அறிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, கிருஷ்ணகிரி தொகுதி நா.த.க வேட்பாளராக சந்தன வீரப்பன் மகள் வித்யாராணியை அறிமுகம் செய்துவைத்தார். சீமான், வீரப்பன் மகள் வித்யாராணியின் பெயரை அறிவித்து அறிகம் செய்து வைத்தபோது, நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வரவேற்பு தெரிவித்தனர்.
வீரப்பன் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிர் தொகுதியில் போட்டியிடுகிறார். யாரும் எதிர்பாராத வகையில், அவர் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீரப்பனின் மூத்த மகள் வித்யா, 4 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது, அவருக்கு ஓ.பி.சி அணியின் மாநிலத் துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், வீரப்பன் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்து கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“