Advertisment

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு உடன் சீமான் பேசியது என்ன?

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லககண்ணுவை சீமான் செவ்வாய்க்கிழமை நந்தனத்தில் அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு நன்றி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Seeman met Communist leader Nallakannu

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவை சீமான் சந்தித்துப் பேசினார்.

சென்னை நந்தனத்தில் மூத்த இடதுசாரி தலைவரான நல்லகண்ணு வசித்துவருகிறார். இவரை, செவ்வாய்க்கிழமை (நவ.15) சீமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சீமான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Advertisment

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான நல்லக்கண்ணுவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மரியாதை நிமித்தமாக நல்லக்கண்ணுவை சீமான் சந்தித்தார்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நல்லக்கண்ணு ஐயாவுக்கு ஓர் அரசியல் நிலைப்பாடு உள்ளது. அவருக்கு இடையூறு ஏற்பட்டவிடக் கூடாது. நான் வேறொரு போராட்டத்துக்கு செல்கிறேன்.     அங்கு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்” என்றார்.

சீமான் நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்பு இடதுசாரிகள், திராவிடர் கழகம் போன்ற இயக்க மேடைகளில் தோன்றி பேசினார்.
பின்னாள்களில் அவர் தனிக்கட்சி தொடங்கிய பின்பு இடதுசாரிகள் மற்றும் பெரியாரிய சித்தாந்தவாதிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment