நாட்டில் நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்: த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்

மாநாட்டிற்கு முதல் நாளே சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

மாநாட்டிற்கு முதல் நாளே சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Seeman NTK on Vijay TVK Maanadu in Madurai Tamil News

"தெரு நாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும், அதனால் பிளேக் நோய் வரும் அதனை கட்டுப்படுத்த போராட வேண்டும். தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்." என்று சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நண்பகல் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையம் வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- 

Advertisment

தெரு நாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும், அதனால் பிளேக் நோய் வரும் அதனை கட்டுப்படுத்த போராட வேண்டும். தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆர்வலராக இருந்தாலும் தமக்கு பாதிப்பு ஏற்படும்போது பயம் வந்து விடும், அதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் திருடன் பேய் பயத்தை விட நாய் பயம் வந்துவிடும். 

தமிழக வெற்றிக்கழக மாநாட்டைப் பொறுத்தவரை, நான் ஒரு ஆய்வாளர் இல்லை, அது ஒரு கட்சியின் மாநாடு. தமிழக வெற்றி கழக மாநாடு நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். இன்று மாலை நடக்கக்கூடிய மாநாட்டிற்க்கு முதல் நாளே சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க எம்பிக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என எச் ராஜா கூறியிருப்பது பற்றி என்றால், சமீபத்தில் கனிமொழி எம்பி கூறும்போது நாங்கள் பாஜக கொள்கைகளில் மாறுபடுகிறோம், அவர்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். நீங்கள் என்ன செய்தீர்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன்.

Advertisment
Advertisements

ஆபரேஷன் சிந்தூர் ஆதரித்து வெளிநாட்டிற்கு பிரதிநிதியாக சென்று பேசிய போது ஏன் இந்த கொள்கை தெரியவில்லை. தமிழுக்கும் தமிழருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்துள்ளது. திராவிடம் என்பது சமஸ்கிருத சொல் மாடல் என்பது ஆங்கில சொல் பாராளுமன்றத்தில் இல்லை என ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை.

வாஜ்பாய் ஆட்சியில் அந்த கொள்கை ஏற்புடையதாக இருந்தது. ஆனால், இப்போது ஏற்கவில்லையா? குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசினீர்கள், மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பேசினீர்கள். அப்போது கூட்டணியில் இருந்தீர்கள் தற்போது கூட்டணியில் இல்லை அதனால் தற்போது எரிக்கவில்லை என்கிறீர்கள்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதனை வரவேற்கிறேன். தெருவுக்குத் தெரு மது கடைகளை திறந்து வைத்துவிட்டு போதையை ஒழிப்பேன் என கூறுவது எப்படி. அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு என கூறி குடிசையை கொளுத்தி விட்டு குடிசை ஒழிப்பு என்பார்கள். அதேபோல மது ஒழிப்பு எனக்கூறி மதுவை குடித்து தான் ஒழிக்க முடியும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

செய்தி: க.சண்முகவடிவேல்.

Vijay Seeman Naam Tamilar Katchi Tamilaga Vettri Kazhagam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: