திருச்சி டி.ஐ.ஜி.வருண்குமார் குறித்த நாம் தமிழர் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள பதிவுக்கு டி.ஐ.ஜி.வருண்குமார் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருச்சி டி.ஐ.ஜி.வருண்குமார் தன்னுடைய மனைவி வந்திதா பாண்டேவை விவாகரத்து செய்ததாக சமூக ஊடகங்ளில் தகவல்கள் பரவியிருந்தது. இதற்கு டி.ஐ.ஜி வருண்குமார் பதிலடி கொடுத்துள்ளார். ''மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி' என சீமான் குறித்து வருண்குமார் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், இதற்கு பதில் அளிக்கும் வகையில், திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் வருண்குமார் கூறியிருப்பதாவது: 'திரளநிதி திருடன் எந்த அளவிற்கு சென்று விட்டான் பாருங்கள் மக்களே, பார்க்கவே பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்' என குறிப்பிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/58c64be6-608.jpg)
அத்துடன், 'மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி' என்றும், ஒரு பாடலில் வரும் வரிகளான 'நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வருண்குமார் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அடிக்கடி இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர், இந்த நிலையில் மேற்கண்ட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஐ.பி.எஸ்., தம்பதியினரான வருண்குமார் மற்றும் வந்திதா விவாகரத்து செய்வதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களால் பகிரப்பட்டு வந்தது. ஆனால், இந்த தகவல் வதந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்