நடிகர் மன்சூர் அலிகான் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது என்றும் பெரிய நடிகர்கள் என்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா தொடர்பாக மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் இதற்கு அவர் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் மனிப்பு கேட்ட முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது
” நான் இதை பற்றி கருத்து சொன்னால், இதை மட்டுமே ஊடகம் வெளியிடும். அவர் என்ன பேசினார் என்று நான் கேட்கவில்லை. என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. இதை வேண்டும் என்றே பேசியிருப்பாரா என்று தெரியவில்லை. நகைச்சுவைக்காக பேசியிருக்கலாம். அதனால் பலரின் மனது காயமடைந்திருந்தால், வருத்தம் தெரிவித்து சென்றுவிடலாம். அவரது மனத்திற்கு அது தவறு என்று தோன்றவில்லை என்றால் அவர் மனிப்பு கேட்க மறுப்பார் தானே. இதைவிட பெரிய பிரச்சனைகள் இருக்கிறது.
பொள்ளாச்சி விவகாரத்தில் கூட்டு வன்புணர்வு நடைபெற்றுள்ளது. ஸ்ரீமதி எப்படி இறந்து போனாள் என்று தெரியவில்லை. இதை பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. 8 விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது ஏன் என்று நீங்கள் கேள்வி எழுப்பவில்லை. மன்சூர் அலிகான் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அதை கவனிக்க எனக்கு நேரம் இல்ல. இங்கே சட்டம் நீதி எல்லாமே, காசு உள்ளவர்கள் பக்கமே சாயும். சாதாரண மக்களுடைய வழக்குகள் நீதிமன்றத்தில் அதிக நாட்கள் தேங்கிக்கிடக்கிறது. அரசியல் தலைவர்கள் சின்னம் தொடர்பாக வழக்கு கொடுத்தால் அடுத்த நாளே தீர்ப்பு வருகிறது. இதுபோல மக்கள் பிரச்சனைக்கு தீர்ப்பு வருகிறதா? சூழல் சமமாக இல்லை. பிரபலமான நடிகர்கள் என்பதால் இந்த விஷயம் பெரிதாக பேசப்படுகிறது. இதை கடந்து செல்வதுதான் சரி ” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“