/indian-express-tamil/media/media_files/2024/10/28/vZNqcVzbzLTMpRWH5cvB.jpg)
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருதுபாண்டியர்களின் 223 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்.
சேவை செய்வதற்காகவே அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் . அரசியல் கொடிய முதலைகள் நிறைந்த குளம். ஒவ்வொரு காலடியும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய்க்கு ஆலோசனை கூறினார்.
மேலும், “மாநாடு என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். விஜய் நடத்தும் மாநாட்டை விட மதுரையில் விஜயகாந்த் நடத்திய மாநாடு தான் சாதனை என்று பிரேமலதா கூறுவதை மறுக்க முடியாது. தே.மு.தி.க மாநாடு மதுரையில் எழுச்சியை ஏற்படுத்தியது என்பதை மறக்கவும் முடியாது” என்று சீமான் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருதுபாண்டியர்களின் 223 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான் கூறியதாவது:
எல்லோருக்கும் தமிழகத்தில் சிலை உள்ளது. மருதுபாண்டியருக்கு சிவகங்கையில் சிலை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வல்லபாய் படேலுக்கு 3000 கோடியில் சிலை வைக்கிறார்கள, எங்கள் பாட்டன் வ.உ.சி-க்கு எங்கு சிலை வைத்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினர் .
மாநாடு என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். விஜய் நடத்தும் மாநாட்டை விட மதுரையில் விஜயகாந்த் நடத்திய மாநாடு தான் சாதனை என்று பிரேமலதா கூறுவதை மறுக்க முடியாது. தே.மு.தி.க மாநாடு மதுரையில் எழுச்சியை ஏற்படுத்தியது என்பதை மறக்கவும் முடியாது. அதுதான் உண்மை என்றார்.
விஜய் மாநாட்டுக்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆயிரம் ரகசியம் இருக்கும் என்றவர், இளைஞர்களின் எழுச்சி மாறுகிறதா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
அரசியலுக்கு நான் விரும்பி வரவில்லை தள்ளி விடப்பட்டு தான் வந்தேன். ஆனால், தம்பி விஜய் விரும்பி வருகிறார் என்றார். ஊடகங்கள் வியாபா நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியவர், அரசியல்வாதிகள் சேவை செய்ய அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தவர், அரசியல் கொடிய முதலைகள் நிறைந்த குளம். ஒவ்வொரு காலடியும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று நேரடியாகவே விஜய்க்கு சொல்லி இருப்பதாக சீமான் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.