Advertisment

தேசிய மலர் தாமரையை பா.ஜ.க சின்னமாக ஒதுக்குவதா? வழக்கு போடுவேன்: சீமான்

நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வந்த கரும்பு விவசாயி சின்னத்தை, தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கிய நிலையில், “தேசிய மலர் தாமரையை பா.ஜ.க சின்னமாக ஒதுக்குவதா” என்று கேள்வி எழுப்பிய சீமான், வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Seeman 1

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வந்த கரும்பு விவசாயி சின்னத்தை, தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கிய நிலையில்,  “தேசிய மலர் தாமரையை பா.ஜ.க சின்னமாக ஒதுக்குவதா” என்று கேள்வி எழுப்பிய சீமான், வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார்.

Advertisment

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ சின்னம் ஒரு வலிமை என்று வைத்தால் வைத்துக் கொண்டாலும்கூட அந்த சின்னத்தைக் கொண்டு போய் சேர்த்தது நாங்கள்தான். இதில் இருக்கிற உண்மை நிலவரத்தை பார்த்து அதற்கு தகுந்த மாதிரி ஊடகவியலாளர்கள் பேச வேண்டும். 

சட்டசபை அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு விழுக்காடு வாக்கை பெற்று இருந்தால் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைப் பெற முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. இப்போது அவசர அவசரமாக வட மாநிலத்தில் ஒரு ஒரு பெரிய அமைப்புக்கு, கட்சிக்கு இந்த சின்னத்தை எடுத்துக் கொடுத்திருந்தால் கூட ஒரு மாதிரி இருக்கும். ஆனால், இவர் பா.ஜ.க-வில் இருந்து பிரிந்து இருக்கிறார். அவருடைய பெயர் வீரராகவ ரெட்டியோ ஏதோ ஒரு பெயர்.  அவர் கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 2 தொகுதியில்  போட்டியிட்டு இருக்கிறார். 71 வாக்கு வாங்கி இருக்கிறார். சிலிண்டர் சின்னத்தில் நின்று இருக்கிறார்.

எல்லாரும் போல சின்னத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வரும்போது அந்த காலகட்டத்தில் நான் வெள்ள பாதிப்பின்போது மக்களோடு நின்று கொண்டிருந்தேன். கவனிக்கவில்லை, ஆறு மாதத்திற்குள் அந்த சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஒரு கால அவகாசம் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் அதற்குள் விண்ணப்பிப்பதற்குள் ஒருவர் விண்ணப்பிக்கிறார், அவசர அவசரமாக அடுத்த நிமிடமே அந்த சின்னத்தை எடுத்துக் கொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது. மனுக்களை வாங்கி வைத்துக்கொண்டு, தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, மனுக்களை பரிசளிக்கும் போது எல்லாருக்கும் சின்னம் ஒதுக்குகிற நேரம் வரும்போது சின்னம் கேட்கிறார்கள். அண்ணன் வைகோ இப்போதுதான் சின்னம் வேண்டும் என்று கேட்கிறார், அண்ணான் திருமாவளவன் இப்போதுதான் கேட்கிறார்.

இப்போது சின்னமே ஒதுக்காத போது அவருக்கு உடனே ஏன் விவசாயி சின்னத்தை எடுத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன , அது விவசாயி சின்னம் என்று நான் வைத்த பெயர்,  அதற்கு அண்ணா கிஸான் என்றோ  அல்லது அவர் கன்னடத்தில் அவர் என்ன பெயர் வைப்பார் என்று தெரியாது, 

அவசர அவசரமாக அந்த சின்னத்தை எடுத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது, இப்போது இதில் என்ன நுட்பமாக பார்க்க வேண்டும் என்றால, அவர் இந்திய கட்சியா, அவர் ஒரு தேசிய கட்சியாக பதிவு செய்து இருக்கிறாரா? பதிவு பண்ணி செய்திருக்கிறார் என்கிறார்கள். பதிவு செய்தாலே தேசிய கட்சி ஆகிவிடும் என்றால், நீங்கள் பதிவு செய்யப்பட்ட கட்சி தான் என்கிறார்கள். அவரும் பதிவு செய்யப்பட்ட கட்சி தானே, அவருக்கு எப்படி ஒரு சின்னத்தை எடுத்து கொடுத்தீர்கள், கர்நாடகா தேர்தலில் நிற்க இந்த தேர்தலிலேயே அவர் சிலிண்டர் சின்னத்தைத் தான் வாங்கியிருக்கிறார். ஆந்திராவில் நிற்பதற்கு கேஸ் சிலிண்டர் கேஸ் ஸ்டவ் சின்னம் வாங்கி இருக்கிறார். ஒரு கட்சிக்கு மூன்று சின்னம் எப்படி கொடுத்தீர்கள். இது எந்த விதியில் இருக்கிறது.

முதலில் பாரதி ஜனதா கட்சியுடைய தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நீங்கள் பாருங்கள் தேர்தல் முடிந்த உடனே இதற்கு வழக்கு போடுவேன். எனக்கு பதில் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் இருந்து தேசிய மலர், நாட்டு மலர்  ‘தாமரை... தாமரை’ என்று எல்லோரும் படிக்கிறோம். அதை எப்படி ஒரு அரசியல் கட்சிக்கு சின்னமாக கொடுத்தீர்கள். ஒரு தேர்தலில் நிற்கிற கட்சிக்கு எப்படி அதை சின்னமாக கொடுத்தீர்கள். நான் மயில் சின்னத்தைக் கேட்டபோது, மயில் அது தேசியப் பறவை என்றீர்கள். இப்போது தேசிய மலரை எப்படி அவர்களுக்கு சின்னமாகக் கொடுத்தீர்கள். ஒன்று தேசிய மலராக தாமரையை வையுங்கள், தாமரை சின்னத்தை எடுங்கள். இல்லை என்றால், தாமரைச் சின்னத்தை அவர்களுக்கு கொடுங்கள். தேசிய மலராக வேற ஒன்றை வையுங்கள். ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், எதையோ ஒன்று வையுங்கள், காலிபிளவரை கூட தேசிய மலராக வையுங்கள். ஆனால், இந்த சின்னத்தை எடுங்கள். இது அநீதியா, இல்லையா இதை ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள். தேசிய மலர் என்று சொல்லக்கூடிய ஒரு மலரை எப்படி சின்னமாக ஒரு கட்சி சின்னமாக தாங்கி நிற்கிறது, இதுதான் ஜனநாயகமா? 

ஒரு சின்னப் பையன், ஒண்ணும் கிடையாது. தி.மு.க எத்தனை வருடம் ஆண்ட கட்சி, அ.தி.மு.க எத்தனை வருடம் ஆண்ட கட்சி. பா.ஜ.க அருமை சகோதரர் அண்ணாமலையோட கட்சியா நூறாண்டு ஆகும் அந்த கட்சி எவனோ ஒருவன் உருவாக்கிய கட்சி. 

இந்த கட்சியை நானே மண்ணும் மிதிச்சு, நானே மண்ணை குழைச்சு, நானே செங்கல் எடுத்து, நானே கட்டிய கட்டடம். இது அப்படி கிடையாது. நீங்கள் கூட்டணி தேடி அலையகிறீர்கள். அவர் ஒரு கூட்டணி தேடி அலைகிறார், இவர்கள் கூட்டணிகளில் இருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரே கட்சி, பெரிய கட்சி நான் தான். 40 தொகுதிகளிலும் போட்டியிடுவேன், 234 தொகுதியிலும் போட்டியிடுவேன், அதை ஏன் யாரும் பேச மாட்டேன் என்கிறீர்கள். மக்களை பார்ப்பதற்கு மக்களை சந்திப்பதற்கு ஒருத்தருக்கும் துணிவில்லை, இன்னும் யார் எந்த பக்கம் போறாங்க என்று தெரியவில்லை. 

நோட்டு பேரன், சீட்டு பேரன், இதற்கு முன்னாடி ஒருத்தர் இருந்தார் ஐயா விஜயகாந்த் பாராளுமன்றத்தில் 40 தொகுதியில் போட்டியிட்டார். அப்புறம், நான் தான். இதுக்கு முன்னாடி நம்ம ஜெயலலிதா அம்மையார் 2014-ல் போட்டியிட்டார். வேறு யாருக்கு துணிவு இருக்கிறது. கேட்டால் என்னை அதர்ஸ் என்கிறார்கள். இவருக்கு 18% அவருக்கு 22%, 42%, 38% விழுக்காடு எதிர்க்கட்சிகள். என் கட்சிப் பெயரை சொல்வதில் உங்களுக்கு என்ன அவ்வளவு தீண்டாமை இருக்கிறது. அவ்வளவு வெறுப்பு இருக்கிறது ஏன். கேட்டால் ஒருத்தரும் இல்லை, நல்ல கட்சியாக வரவில்லை,  நல்ல அரசியல் வரவில்லை என்கிறார்கள். முதலில் வரவிட வேண்டும் இல்லையா, வந்து நிற்கிறான். சண்டை போடுகிறான். இந்த கட்சிகள் மூன்றையும் பார், தனித்து நிற்கிற ஒருத்தனையும் பார், நான் யார்?

அண்ணாமலை அண்ணாமலையாக கட்சி ஆரம்பித்து இருந்தால் அவரை ஒரு முறை சொல்ல சொல்லுங்கள். சீமான் நிற்கிற இடத்தில் நிற்க முடியுமா என்று கேளுங்கள். எடப்பாடியை நிற்க சொல்லுங்கள், இல்லை ஸ்டாலினை நிற்க சொல்லுங்கள் பார்ப்போம். இது நான் என் கட்சி. 

அண்ணாமலை பேட்டி கொடுக்கிறார், அதெல்லாம் நான் முடிவு பண்ண முடியாது. தமிழிசை நிற்கிறாரா? நிர்மலா சீதாராமன் இருக்கிறாரா? அண்ணாமலை நிற்கிறாரா தெரியாது யாரோ ஒரு முடிவு பண்ணுகிறார். அப்புறம் நீங்க தலைவர் என்கிறீர்கள் எந்த இடத்தில் யார் நிற்க வேண்டும் என்பதை நான் முடிவு எடுப்பேன். ஏனென்றால், இது என் கட்சி, அது உங்க கட்சி அல்ல. உங்க முதலாளி வேறு எங்கே இருக்கிறார். நீங்க ஒரு மேனேஜர் தமிழ்நாட்டுக்கு ஒரு மேஸ்திரி. சின்னத்தை எடுத்து விட்டால், எங்க ஊரில் ஒரு கதை சொல்வார்கள், சீப்பு ஒலித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா, அதற்குள் அஞ்சு ஆறு தாலியை கட்டி விட்டு விடுவான், நாங்கள் அப்படிப்பட்ட ஆட்கள். சின்னத்தை எடுத்து விட்டால் எடுத்து விடு, எனக்கு கழுதை கொடுப்பியா கத்தரிக்காய், வெண்டைக்காய் கொடுப்பியா? குண்டு ஊசி கொடுப்பியா. கலைஞருக்கு தமிழ்நாடு சொந்தமில்லை. இது என் நாடு. தம்பி அண்ணாமலை இடம் போய் கேளுங்கள், என் நாடு என் மக்கள் போட்டு பயணிக்கிறீர்களே, எது உங்க நாடு உங்க மக்கள் கேளுங்கள். இந்த ஊடகவியலாளரும் கேளுங்கள். 

என் நாடு என் மக்கள் என்று சீமான் போடும் போது தமிழ் தேசியம் அது பாசிசம், அது சாவனிசம், அது செபரேடிசம் என்றெல்லாம் பேசினீர்கள் இல்லையா, அப்புறம் இது என் நாடு என் மக்கள் என்று எப்படி போடுவீர்கள். என் நாடு என் மக்கள் என்று முழக்கத்தை முன்வைத்து கர்நாடகாவில் நடத்துவீர்களா, இல்லை உங்கள் தலைவர் இருக்கிற குஜராத்தில் தம்பி அண்ணாமலை நடக்க முடியுமா? இதே என் நாடு என் மக்கள் முழுக்கத்தை முன்னிட்டு நீங்கள் அதிகாரியாக இருந்த கர்நாடகாவில் நடக்க முடியுமா? என் நாடு என் மக்கள் என்று பெயர் வைத்து ஓட்டு கேட்பது எனக்கா, உங்களுக்காகவா? என் அரசியலுக்கு தான் நீங்கள் வாக்கு கேட்கிறீர்கள். அதுதான் தமிழ் தேசம் அதுதான் தமிழ் தேசியம், என் நாடு என் மக்கள் என்கிறீர்கள். நாங்கள் எல்லாம் உங்கள் மக்கள், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள், லட்சத்தீவு மீட்பு, காவிரி நதி நீர் உரிமை, மீத்தேன், முல்லைப் பெரியாற்று உரிமை, வளக் கொள்ளை, லஞ்சம் ஊழலையே இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஒழிக்க முடியாதா,  அதை சீர்திருத்த முடியாதா? சரி செய்ய முடியாதா, சரி செய்ய முடியும் இல்லையா, ஆனால். வளத்தை மணலையும் மலையையும் நீங்கள் உருவாக்குவீர்களா? மோடி கையெழுத்து போட்டு விட்டார் என்று மலையை கொஞ்சம் வளர்க்க முடியுமா? 

நீங்கள் கோவில் கிட்டவே இருக்கிறீர்கள், குடிசைக்கு எப்போது வருவீர்கள், சாமிகிட்டே இருக்கிறீர்களே எப்போது பூமிக்கு வருவீர்கள், எங்கள் ஐயா எடப்பாடி இடம் கேளுங்கள், தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாட்டைக் காப்போம் இதைத்தான் நான் 15 வருடமாக பேசிக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் தமிழ் தேசியம் என்கிறீர்கள், எல்லா திராவிட கட்சியும் பாருங்கள் நான் பேசும் அரசியலை பேசுகிறார்கள். ஓட்டு எனக்காக கேட்கிறார்கள், அம்மா கனிமொழி என்ன சொல்கிறார்கள் தமிழுக்கும் தமிழருக்காகவும் யார் போராடுகிறார்களோ அவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள். அவர்களும் எனக்கு தான் வாக்கு கேட்டு வேலை செய்கிறார்கள், தம்பி அண்ணாமலையிலிருந்து எடப்பாடி இருந்து கனிமொழி வரை வாக்கு கேட்பது நாம் தமிழர் கட்சிக்கு தான், எனக்கு தான். அதனால், இந்த கோஷங்களை மாற்றி விடாதீர்கள், என் நாடு என் மக்கள் எப்போதும் தம்பி அண்ணாமலை நம்ம முழக்கத்தை வைத்து தான் நடக்கிறார்கள் நமக்கு தான் நடக்கிறார்.” என்று சீமான் கூறினார்.



மேலும், திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியினர் விவசாயி சின்னத்தை வைத்துதான் வாக்கு கேட்கிறார்கள் என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான்,  “விவசாயி சின்னம் கிடைக்கும் என்று நம்புகிறோம், கடைசி துளி நம்பிக்கை இருக்கும் வரை போராடுபவனே வீரன். விவசாயி சின்னம் கிடைக்கும் என்று நம்புகிறோம், ” என்று கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment