scorecardresearch

நெல்லுக்கு கொட்டகை இல்லை, கடலில் பேனா ஏதற்கு? சீமான் கேள்வி

மெரினா கடற்கரையை கபளீகரம் செய்த கூட்டம், கடலை அபகரிக்க துடிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

Seeman questioned in Nagercoil why the karunanithi pen memorial in the sea

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மெரினா கடற்கரையை இனியும் புதைகுழியாக மாற்றக்கூடாது.

கடற்கரையை கபழிகரம் செய்த கூட்டம் இப்போது கடலையும் அபகரிக்க நினைக்கிறது. அந்த கடற்கரை பகுதியில் வாழும் மீனவர்களின் பாதுகாப்பு பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது தந்தையின் நினைவாக கடலை கல்லால் மூடி பேனா நினைவு சின்னம் அமைக்க ரூ.80 கோடி திட்டமிட்டுள்ளார்.
யார் வீட்டு வரிப்பணம்த்தில் யாருக்கு பேனா நினைவு சின்னம்.? தஞ்சையில் விவசாயிகளின் உடல் உழைப்பில், வேர்வை சிந்தி விளைவித்த நெல்லுக்கு பாதுகாப்பு கூடம் அமைக்க முடியாத ஆட்சியாளர்கள் ரூ.80கோடியில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது கொடுமையாக இல்லையா.?

விவசாயிகள் விளைவித்த நெல்லை மழையில் இருந்து பாதுகாக்க சில லட்சம் ரூபாய் செலவில் டார் பாயால் இன்னும் எத்தனை நாட்களுக்கு,மூடி வைக்கும் இந்த கொடுமையை அனுமதிப்பது?

விளை நெல்லை பாதுகாக்க கால தாமதம் செய்யாது கொட்டகை அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகளை மொத்தமாக பாது காக்கவேண்டும்.
ஒரு தம்பி கொஞ்ச காலமாக தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நாங்கள் தான் எதிர் கட்சி என வாய் சவடால் அடித்த அண்ணாமலையின்,சப்த நாடியும் இப்போது அடங்கிவிட்டது.

இடைத்தேர்தல் அறிவிப்போடு Z பிரிவு பாதுகாப்பில் இருக்கும் அண்ணாமலையை காணவில்லை. இவருக்கு எதற்காக இவ்வளவு உச்ச பச்சை பாதுகாப்பு என கேட்டால் ஒன்றிய அரசின் உளவு பிரிவின் கண்டு பிடிப்பாம்.
சீனாவால் அண்ணாமலைக்கு ஆபத்தாம். அதற்கு தான் இந்த பாதுகாப்பு என அந்த தம்பியே சொல்வதை கேட்கும் போது அடக்க முடியாத சிரிப்புதான் வருகிறது.

ஈரோடு இடைத்தேர்நலுக்கு பின் அதிமுக இருக்குமா? என கேள்வி எழுப்புகிறீகள்?.அதிமுக இருந்தாலும், இல்லாமல் போனாலும் ஏன் கவலைப் படவேண்டும்.
நிதி அமைச்சரின் பட்ஜெட் பற்றிய சுப்பிரமணிய சுவாமி கருத்தை நானும் ஆதரிக்கிறேன். பட்ஜெட் பற்றிய அரிச்சுவடி தெரியாதவர் நிதி அமைச்சராக இருந்தால் பட்ஜெட் பலசரக்கு கடை வியாபாரியின் கடையின் பொருள் பட்டியல் போன்றுதான் இருக்கும்.

நாடாளுமன்ற தேர்தல் எப்போதும் வரட்டும் எல்லா தேர்தல் போல் நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்தே களம் காணும். இந்த தைரியம் எந்த கட்சிக்கும் கிடையாது.
பிரதமர் மோடி அவரது கை ஐந்து விரல்கள்போல் அரசின் அதிகார துறைகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்.

பாஜக கட்சியில் பதவி வகித்தவர்களை நீதிபதியாக நியமிப்பவர்களிடம் எப்படி நீதி கிடைக்கும் என செய்தியாளர்களை நோக்கி மீண்டும் சீமான் கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Seeman questioned in nagercoil why the karunanithi pen memorial in the sea

Best of Express