நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என கவர்னர் ராஜ்பவனில் கூறியுள்ளாரே எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சீமான்,
அண்ணா தமிழ்நாடு என பெயர் வைக்கும் முன்னே, பக்தவச்சலம் முதலமைச்சராக இருக்கும்போதே தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
இரட்டை மலை சீனிவாசன் 1920க்கு முன்னரே தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தார். தமிழ்நாடு எங்கள் நாடு. இஷ்டம் இருந்தா இரு. இல்லை ஓடு. தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருக்க கூடாது” என்றார்.
மேலும், “அவருக்கு பொழுதுபோகவில்லை. இதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் என எழுத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/