நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அவர், “பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச். ராஜா, பொன். இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு கவர்னர் பொறுப்பு வழங்கியிருக்க வேண்டும். இதனை நான் எனது தனிப்பட்ட கருத்தாக சொல்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, “ஹெச். ராஜாவின் கட்சி மீது தமக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஹெச். ராஜா தனது கொள்கையில் உறுதியாக உள்ளார்” என்றார்.
மேலும், “அவசரமாக ஒருவருக்கு குருதி தேவைப்படுகிறது என்றால் இவர் பாஜககாரர் இவருக்கு கொடுக்க மாட்டேன் என்றா நாம் பேசுவோம்” என்றார்.
இதற்கிடையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் சீமான் பேசினார். அப்போது தமிழர் ஒருவர் பிரதமராக அறிவித்தால் நான் உறுதியாக ஆதரிப்பேன்.
ஏன் இதனை சொல்கிறேன் என்றால் அது நடக்காது என்பது தெரியும். அதற்காகதான் உறுதியாக சொல்கிறேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“