scorecardresearch

அமைச்சர் ஆக மாட்டேன் என உதயநிதி உறுதி கூறுவாரா? சீமான் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சர் ஆவார் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு

அமைச்சர் ஆக மாட்டேன் என உதயநிதி உறுதி கூறுவாரா? சீமான் கேள்வி

Seeman said Udhayanidhi Stalin going to minister soon: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக மாட்டேன் என உறுதியாக சொல்வாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற தி.மு.க செயற்குழுவில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, இது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், ”கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து, கழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். கழகத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க அடுத்தக்கட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.

இந்தச் சூழலில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போது கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் வழியில் வந்த நம் கழகத் தலைவர் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம். மக்கள் பணியாற்றிடுவோம். கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்” என உதயநிதி குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்: ஸ்டாலின் கான்வாயில் செய்தியாளரை தள்ளிவிட்ட பாதுகாப்பு போலீஸ்: வேறு பணிக்கு மாற்றி உத்தரவு

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சராவார் என தெரிவித்தார். சீமானிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என பல்வேறு மாவட்ட தி.மு.க செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்து கேட்டப்போது, நீங்க கிள்ளுற மாதிரி கிள்ளுங்க, நான் அழுகுற மாதிரி அழுகிறேன் என்பது போலத்தான். உதயநிதி ஸ்டாலினை உறுதியாக அமைச்சர் ஆக்குவாங்க. 5 ஆண்டு காலத்திலும் நிச்சயம் அமைச்சர் ஆக மாட்டேன் என உதயநிதியை உறுதியா சொல்லச் சொல்லுங்கள். அப்படி சொல்லுவாரா. அவருக்கு எதிர்ப்பு இல்லை. ஆதரவு தான் இருக்கு என்பதை காட்டத்தான் இதெல்லாம், என கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Seeman said udhayanidhi stalin going to minister soon