scorecardresearch

”நான் இருக்கும் வரை 8 வழிச்சாலை, பரந்தூர் விமானநிலையம் அமைக்க முடியாது”: சீமான்

நான் இருக்கும் வரை 8 வழிச்சாலை மற்றும் பரந்தூர் விமானநிலையம் அமைக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Naam Tamilar Party coordinator Seeman has started a new Twitter account
புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நான் இருக்கும் வரை 8 வழிச்சாலை மற்றும்  பரந்தூர் விமானநிலையம் அமைக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ” இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளை எதிர்ப்பதை தவிர, பாஜக-விற்கு கோட்பாடுகள் இல்லை.  பக்கத்தில் இருக்கும் மனிதனை பகையாக பார்க்க  வைத்துவிட்டு, பசுவை அணைப்பதை ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் இருக்கும் வரை 8 வழிச்சாலை போட முடியாது. .நான் இருக்கும் வரை பரந்தூர் விமானநிலையம்  அமைக்க முடியாது. நான் இருக்கும் வரை எந்த ஒரு இடத்திலும் சிப்காட் தொழிற்சாலை துவங்க முடியாது. பேச்சுக்கு சொல்லிக்கொண்டு இருக்கலாம், ஆனால் எதுவும் நடக்காது. பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பும் நிலையில்தன் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. குற்றம் செயல்கள் அதிகமாக  வட இந்தியர்கள்தான் காரணம்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Seeman says 8 way track and paranthur airport will not constructed in tamiknadu