வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சண்டாளன் என்ற ஒரு சமூகத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தி முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆவடி காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்தில் தான் அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அஜய் என்பவர் எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் முறையிட்டார்.
அந்த புகாரின் மீது விசாரணை நடத்தி எஸ்சி/எஸ்டி ஆணையம், ஆவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் போலீசார் காவல் நிலைய போலீஸ் உடனடியாக வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 29ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்திருப்பதாக பட்டாபிராம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“