‘திராவிடம் என்றால் திருடன் என்று பொருள்... விஜய் வேடிக்கை காட்ட வந்த சிங்கம்’: சீமான் ஆவேசப் பேச்சு

“திராவிடம் என்றால் எப்படி பார்த்தாலும் திருடன் என்றுதான் பொருள் வருகிறது” என்றும் “விஜய் வேட்டையாட வந்த சிங்கம் இல்லை, வேடிக்கைப் பார்க்க வர சிங்கமாகவும் இல்லை, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்” என்று சீமான் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

“திராவிடம் என்றால் எப்படி பார்த்தாலும் திருடன் என்றுதான் பொருள் வருகிறது” என்றும் “விஜய் வேட்டையாட வந்த சிங்கம் இல்லை, வேடிக்கைப் பார்க்க வர சிங்கமாகவும் இல்லை, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்” என்று சீமான் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

author-image
WebDesk
New Update
Seeman angry speech 4

'எது நமக்கான அரசியல்?' என்ற தலைப்பில் இஸ்லாமிய அரசியல் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பாக வியாழக்கிழமை (11.09.2025) இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 'எது நமக்கான அரசியல்?' என்ற தலைப்பில் இஸ்லாமிய அரசியல் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

Advertisment

அப்போது, திராவிடம், திராவிட மாடல் ஆட்சி குறித்து பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “திராவிடம் என்றால் திருடன் என்று தான் பொருள்” என்று ஆவேசமாகப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய சீமான், “திராவிடம் என்ற ஒன்றே கிடையாது, சங்கி என்றால் கூட நண்பன் என்ற பொருள் வருகிறது. திராவிடம் என்றால் எப்படி பார்த்தாலும் திருடன் என்றுதான் பொருள் வருகிறது. திராவிடம் என்ற அந்த சொலே தமிழ்ச் சொல் அல்ல, அது சமஸ்கிருதம்.  மாடல் என்பது தமிழ் அல்ல ஆங்கிலம், திராவிட மாடல் ஆட்சி, எதிர்க்க வேண்டும் என ஒன்றுமில்லை. எப்படிப்பார்த்தாலும், திராவிடம் என்றால் திருடன் என்றுதான் பொருள் வருகிறது” என்று பேசினார். 

மேலும்,  “தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள், உன் தமிழில் என்ன இருக்கிறது என்று கூறுகிறார்கல். ஒரு தெலுங்கர், மலையாளி, மராட்டியர், பீகாரி, குஜராத்தி, கன்னடர் எல்லோரும் என் நிலத்தில் வாழ்கிறார்கள். நான் தமிழன், நீ கன்னடர் உன் தாய் மொழி கன்னடம், கர்நாடகா. என் தமிழ் நிலத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டால், அப்போது இவர்கள் மொழியில் எல்லாம் இருக்கிறது, என் மொழியில் இல்லையா என்கிற கேள்வி எனக்கு வருமா வராதா?” என்று சீமான் பெரியாரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Advertisment
Advertisements

இதைத்தொடர்ந்து, விஜயை விமர்சித்துப் பேசிய சீமான், “அரசியலுக்கு எதையாவது தெரிந்துகொண்டு வரவேண்டும் இல்லையா? காமராஜரை வைத்தாய், யார் காமராஜர் என்று 10 நிமிடம் பேசு. வேலுநாச்சியாரை வைத்தாய், யார் வேலு நாச்சியார் என்று 10 நிமிடம் பேசு. நீ மொத்தமாகப் பேச அனுமதி கேட்பதே 10 நிமிடம்தான். திருச்சி மாநாட்டில் பேச 15 நிமிடம்தான் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அரசு இன்னும் ஒரு 5 நிமிடம் பேசிக்கொள் என்று கொடுத்திருக்கிறது. இதற்கு சனிக்கிழமை, ஏன். சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் செய்ய வேண்டும். அடுத்தது சனிக்கிழமை, பிக் பாஸ் நிகழ்ச்சி மாதிரி சனிக்கிழமை அன்று வருவார். இதில் வேறு அவர் வேட்டைக்குதான் வெளியில் வருவாராம், நீ வேட்டைக்கு வெளியில் வருவதில்லை, வேடிக்கை காட்ட வந்த சிங்கம், படித்திருக்கிறாய் உனக்கு அடிப்படைகூட தெரியவில்லை. சிங்கம் செத்ததை திண்ணாது என்கிறாய். ஆண் சிங்கம் வேட்டைக்கு போகாது, பெண் சிங்கம்தான் வேட்டையாடிக் கொண்டு வந்து போடும், அது செத்ததைத்தான் முன்னாடி கொண்டுவந்து போடும், அதைத்தான் ஆண் சிக்கம் திண்ணுகிறது. நீ வேட்டையாட வந்த சிங்கம் இல்லை, வேடிக்கைப் பார்க்க வர சிங்கமாகவும் இல்லை, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்” என்று சீமான் த.வெ.க தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: