Seeman | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
சீமான் கூறும் ரகசியம்
மக்களவைத் தேர்தலை ஒட்டிய பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அண்ணாமலை வெற்றி பெற்ற கோவையில் தி.மு.க டம்மி வேட்பாளரை போட்டுள்ளது என்றும், தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெறுவதற்காக அந்தத் தொகுதியை பா.ஜ.க தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.
தேர்தல் பரப்புரையின் போது சீமான் பேசுகையில், "கோவையில் அண்ணாமலையை தோற்கடிக்க தி.மு.க வேலையே செய்யவில்லை. வேலை செய்யாதீங்கன்னு சொல்லியிருக்கிறார்கள். அதேபோல், அ.தி.மு.க-வும் சுத்தமாக வேலை செய்யவில்லை. தொகுதி பொறுப்பாளர் எஸ்.பி வேலுமணி அந்தத் தொகுதியிலே இல்லை. அண்ணாமலையை தோற்கடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. திருப்பூரில் கூட்டம் போட்ட ஸ்டாலின் ஏன் கோவையில் போடவில்லை?. பா.ஜ.க-வை எதிர்ப்பது போல் நடிக்கிறார்கள். நாடகம் போடுகிறக்கிறார்கள்.
இதேபோல், தூத்துக்குடியில் கனிமொழி போட்டி போடும் தொகுதியில் த.மா.க-வுக்கு சீட் கொடுத்து டம்மி வேட்பாளரை போட்டுள்ளது பா.ஜ.க. அண்ணாமலைக்காக தி.மு.க-வும், கனிமொழிக்காக பா.ஜ.க-வும் டம்மி வேட்பாளர்களை போட்டுள்ளன. பா.ஜ.க எதிர்ப்பதாக இருந்தால், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சதுரங்கம் மற்றும் கேலோ இந்திய போட்டிக்கு பிரதமரை வரவைக்கணும்?. அப்பா சாயந்தரம் சந்திப்பார். மகன் காலையில் சந்திப்பார். எந்த மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சருக்கு பிரதமர் நேரம் கொடுத்து சந்திருக்கிறார்.
கோவையில் ஒருவர் கூட வேலை செய்யவில்லை. ஆ. ராசா-வைத் தவிர ஒரு பெரிய தலைவர் கூட அங்கு களத்தில் இல்லை. ஒருவர் கூட பா.ஜ.க-வை எதிர்த்து பேசவில்லை ." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“