New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Seeman-3.jpg)
சீமானை பாக்சிங் போட அழைத்த நபர்; வைரலாகும் ஆடியோ; காட்டமாக பதிலடி கொடுத்த சீமான்
சீமானை பாக்சிங் போட அழைத்த நபர்; வைரலாகும் ஆடியோ; காட்டமாக பதிலடி கொடுத்த சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியின் கணவர் போனில் மிரட்டியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சீமான் மீது புகார் சுமத்திய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்தவர் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி. இதனால் சீமான் தரப்புக்கும், இவருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றுச் சென்ற நிலையில், வீரலெட்சுமி தரப்புக்கும் சீமான் தரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை வம்புக்கு இழுத்ததாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக வீரலட்சுமி தரப்பில் இதுவரை எந்த கருத்தும் சொல்லப்படவில்லை.
அந்த ஆடியோவில் சீமானிடம் போனில் பேசும் நபர், அண்ணே... நீங்க நல்லா இருக்கீங்களாண்ணே? என்கிறார். அதற்கு சீமான், ஏங்க நீங்க யாருன்னு சொல்ல மாட்டீங்களா? நான் நல்லா இருக்கேனா இல்லையான்னு கேட்டுகிட்டு இருக்கீங்க என கடுப்பாகிறார். ஆனாலும் போனில் பேசும் நபர், அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே என்கிறார். அதற்கு சீமான், நீங்க யாருன்னு சொல்லிட்டு பேசுங்க என்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தநிலையில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது, வீரலட்சுமியின் கணவர் போனில் மிரட்டியதாக வெளியாகியுள்ள ஆடியோ குறித்து சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சீமான், அது பேசக் கூடாதுன்னு நீதிபதி சொல்லி இருக்காங்க.. பாக்சிங் சரிதான்.. அவரு பகல் நேரத்துல பேசுனா நாம பாக்சிங் போகலாம்.. 7 மணிக்கு மேல பேசுறாரு.. அவரு பாக்சிங்க்கு கூப்பிடுறாரு.. நான் பேசுவதை அவர் பதிவு பண்றாருன்னு தெரியுது. நாம எதையாவது பேசி அவர் பதிவு பண்ணி இந்த மாதிரி கேள்வி வரும்னுதான் செல்போனை கட் செய்தேன். அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டு சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்லுங்க.. எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க, நீங்க வாங்க அவரோட சண்டை போட்டு ஜெயிச்சிடுங்கன்னு சொல்லுங்க.. அவர் கிட்ட நேரில் முதலில் ஒருமுறை வந்து நில்லு.. அப்புறம் சண்டை போடலாம்னு சொல்லுங்க.. கேட்கும்போது சிரிப்பா இருக்குல்ல.. மகிழ்ச்சியாக இருங்க.. இவ்வாறு சீமான் பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.