நடிகை விஜயலட்சுமி வழக்கு: அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுகிறேன்- நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் சீமான்

அதில், "தன்னுடைய சொல், செயல்களால் விஜயலட்சுமிக்கு வலி அல்லது காயம் ஏற்பட்டிருந்தால், நிபந்தனையின்றி மன்னிப்புக் கோருவதாகவும்" மேலும், நடிகைக்கு எதிரான தனது அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அதில், "தன்னுடைய சொல், செயல்களால் விஜயலட்சுமிக்கு வலி அல்லது காயம் ஏற்பட்டிருந்தால், நிபந்தனையின்றி மன்னிப்புக் கோருவதாகவும்" மேலும், நடிகைக்கு எதிரான தனது அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

author-image
WebDesk
New Update
seeman sc

Seeman case

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் அவதூறு வழக்குகளில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்டோபர் 8) உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். 

Advertisment

வழக்கின் பின்னணி:

கடந்த 2011ஆம் ஆண்டில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். 2012இல் அந்தப் புகாரை அவர் வாபஸ் பெற்றாலும், 2023ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய புகாரைத் தாக்கல் செய்தார்.

இந்தப் புகார்களை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

Advertisment
Advertisements

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு:

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த விவகாரத்தில், "நீங்கள் குழந்தைகள் இல்லை. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும், எதிர்காலத்தில் விஜயலட்சுமியைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தது. மன்னிப்புக் கோரத் தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தது.

சமரசம் மற்றும் தீர்ப்பு:

இந்த உத்தரவைத் தொடர்ந்து, சீமான் இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், "தன்னுடைய சொல், செயல்களால் விஜயலட்சுமிக்கு வலி அல்லது காயம் ஏற்பட்டிருந்தால், நிபந்தனையின்றி மன்னிப்புக் கோருவதாகவும்" மேலும், நடிகைக்கு எதிரான தனது அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அதேபோல், நடிகை விஜயலட்சுமி தரப்பிலும் மன்னிப்புக் கோரப்பட்டது. மேலும், சீமானுக்கு எதிரான புகாரைத் திரும்பப் பெறுவதாகவும், இதற்கு மேல் எந்த வழக்குகளையும் எடுத்துச் செல்ல விரும்பவில்லை என்றும் விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பினரின் இந்த பரஸ்பர மன்னிப்பு மற்றும் சமரசத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சீமான் மீதான வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டது. 

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: