Advertisment

அயோத்தி ராமர் கோவில் திறக்கும் நாளில் தமிழக கோயில்களில் தடையா? நிர்மலா சீதாராமனுக்கு சேகர் பாபு கண்டனம்

தமிழ்நாட்டில் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்தி பரப்புவதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sekar babu nirmala sitharaman

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் நாளன்று தமிழ்நாட்டில் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்தி பரப்புவதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் (ஜனவரி 22)  தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு வழிபாடு, அன்னதானம், பிரசாதம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் பெரும் சர்ச்சையானது.

இதைத் தொடர்ந்து, இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில்,  “ஜனவர் 22-ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பதிவு வைரலான நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு  மறுப்பு தெரிவிது கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் தி.மு.க இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்கக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில், கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறியதாவது: “இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு நடைபெறுகின்ற பிரம்மாண்டமான உரிமை மீட்பு மாநாடு, இந்த மாநாட்டின் செய்திகளை திசைதிருப்புவதற்காகவும் இறைவனுக்கு எதிரானது இந்த ஆட்சி என்பதைப் போல சித்தரிப்பதற்காகவும் இப்படி கங்கனம் கட்டிக்கொண்டு பொய் பிரச்சாரம் பரப்புவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படி எப்படிப்பட்ட பொய் புரட்டுகளை உருட்டினாலும், தமிழகத்தில் இன்று நடந்துகொண்டிருக்கின்ற, இந்த உரிமை மீட்பு மாநாடு, தி.மு.க இளைஞர் அணி 2வது மாநில மாநாடு, இன்றைக்கு இந்திய அளவிலே பேசப்பட்டிருக்கின்ற மாநாடாக மாறும் என்பதை, இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களால், சதி வலைகளால் எந்த அளவுக்கும் தள்ளிப்போட முடியாது என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Minister PK Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment