தொழிலதிபர் சேகர் ரெடியின் மருமகனாக வர உள்ள சந்திரமவுலிக்கு மாரட்டைப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கும் , திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி மகன் சந்திரமவுலிக்கும் சமூபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இவர்களது திருமணத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் மருமகன் சந்திரமவுலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் , அவர் சென்னையில் உள்ள காரிவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.