Advertisment

"சசிகலா தலைமையே விருப்பம்" ஆடியோ பொய்யானது - செல்லூர் ராஜூ விளக்கம்

Former Admk Minister Sellur Raju On sasikała viral audio Tamil News: சசிகலா தலைமையே விருப்பம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அது பொய்யானது என விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sellur raja Tamil News: Former Minister Sellur Raju on sasikała viral audio

ADMK minister seller raja Tamil News: கடந்த 4 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி கே சசிகலா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் சசிகலா ஃபேக்டர் முக்கிய பங்கு வகிக்கும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், தான் அரசியலிலிருந்து ஒதுங்க இருப்பதாகக் கூறி அனைத்திற்கும் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisment

அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா மீண்டும் களமாட உள்ளார் எனவும், கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் அரசியல் வட்டாராங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்தமிழக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

publive-image

இதற்கிடையில், அதிமுக தொண்டர்கள் முதல் முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் என பலர் அவருடன் தொடர்ந்து உரையாடி வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. தவிர அதிமுக நிர்வாகிகள் சில சசிகலாவுடன் உரையாடும் ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், மதுரை மாவட்ட அதிமுக முகமும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, சசிகலாவின் தலைமையை தான் விருப்புவதாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த ஆடியோவில், கட்சிக்கான அடையாளம் அம்மாவிற்கு பிறகு சின்னம்மா என்று தானே இருக்கு என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள ராஜு, "இருக்கு அப்படி தான் இருக்கு. நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அதற்கு முறைப்படி தான் போக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள். காலம் கை மீறாத அளவிற்கு பார்த்துக்கொள்வோம்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சசிகலாவுக்கு தான் ஆதரவு தெரிவித்து பேசிய ஆடியோ பொய்யானது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சசிகலாவுடன் நான் பேசுகிறேன் என்றால் ஊடகங்களிமே அதை கூறியிருப்பேன். அந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது.

கழகம் ஒற்றுமையாக இருக்கும் நேரத்தில் வேண்டும் என்றே இதை செய்துள்ளார்கள். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், நகர்ப்புற தேர்தலை முன்னிட்டும் இதை செய்துள்ளார். அது ஆளுங்கட்சியினரா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை.

கட்சி ஒற்றுமையை பிடிக்காத சில விஷமிகள் இதுபோன்று செய்துள்ளன. கட்சி தலைமையிடம் கேட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk Admk Madurai Sellur Raju Minister Sellur Raju
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment