2 அமைச்சர்கள் இருந்தும் ஒரு மேயரை நியமிக்க முடியவில்லை... மதுரை மாநகராட்சியை கலைத்து விடுங்கள்- தி.மு.க.வை சாடிய செல்லூர் ராஜூ

மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், ஒரு மேயரை நியமிக்க முடியாமல் தவிக்கும் கட்சி தி.மு.க. ஆகும். பேசாமல் மாநகராட்சியை கலைத்துவிட்டு செல்லுங்கள். தி.மு.க. மீண்டும் 2026-ல் ஆட்சிக்கு வந்தால், நாட்டை காப்பாற்ற முடியாது.

மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், ஒரு மேயரை நியமிக்க முடியாமல் தவிக்கும் கட்சி தி.மு.க. ஆகும். பேசாமல் மாநகராட்சியை கலைத்துவிட்டு செல்லுங்கள். தி.மு.க. மீண்டும் 2026-ல் ஆட்சிக்கு வந்தால், நாட்டை காப்பாற்ற முடியாது.

author-image
WebDesk
New Update
Madurai West MLA Sellur Raju AIADMK being boycotts Corporation meetings Tamil News

Madurai

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் 54-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முனிச்சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தி.மு.க. மற்றும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
 
அவர் பேசுகையில், "31 ஆண்டு காலம் ஆட்சி செய்த அ.தி.மு.க., சாமானியர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கும் பதவி வழங்கி சமத்துவத்தை உறுதி செய்த கட்சி. மகளிருக்கு சம உரிமை அளித்த கட்சி அ.தி.மு.க. தான். ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கம் பிரிவது இயல்பு, ஆனால் தி.மு.க.வில் இருந்து பிரிந்த அ.தி.மு.க., இன்று இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.

Advertisment

'அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை' என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வைகை கரையில் சாலைகள் அமைத்து சாதனை படைத்தது அ.தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க. ஆட்சியில் கலைஞர் நூலகம், ஏறு தழுவுதல் அரங்கம் போன்றவைதான் மதுரைக்கான சாதனையாக கூறப்படுகிறது. மேலும், ₹170 கோடி மதிப்பில் கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்திட்டத்தை வடிவமைத்ததும் அ.தி.மு.க. அரசுதான். ஆனால், தி.மு.க. ஆட்சியில் அது இன்னும் நிறைவேறவில்லை.

மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு போராடி ₹200 கோடி சொத்து வரி ஊழலை வெளிக்கொண்டு வந்தனர். கல்யாண மண்டபங்கள் மற்றும் வீடுகளுக்கு அநியாயமாக சொத்து வரி விதித்தது தி.மு.க. ஆட்சிதான். இன்று அதன் காரணமாகவே மேயர் இந்திராணி ராஜினாமா செய்ய நேரிட்டது. மேயரின் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேயர் ராஜினாமா செய்து இரண்டு வாரமாகியும் புதிய மேயரை தேர்வு செய்ய தி.மு.க. திணறுகிறது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், ஒரு மேயரை நியமிக்க முடியாமல் தவிக்கும் கட்சி தி.மு.க. ஆகும். பேசாமல் மாநகராட்சியை கலைத்துவிட்டு செல்லுங்கள். தி.மு.க. மீண்டும் 2026-ல் ஆட்சிக்கு வந்தால், நாட்டை காப்பாற்ற முடியாது.

Advertisment
Advertisements

அ.தி.மு.க. எந்த காலத்திலும் கூட்டணிக்காக யாரையும் வற்புறுத்தி அழைத்ததில்லை. எங்கள் கொள்கைகளுடன் மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம். அ.தி.மு.க. ஒருவருக்கும் துரோகம் செய்யாத கட்சி. நண்பன் துரோகம் செய்தால், அதனை எங்கள் வரலாறு மன்னிக்காது," என்று செல்லூர் ராஜூ பேசினார்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: