/indian-express-tamil/media/media_files/2025/03/29/Z4SoQbg3spuKwezMqpob.jpg)
மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்கேற்று, பொதுமக்களுடன் இணைந்து சமூகப் பணியை மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசும் போது, “இது பீருக்காக வந்த கூட்டம் அல்ல; ரத்ததானத்துக்காக வந்த கூட்டம்,” என்று தெரிவித்தார்.
இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த செல்லூர் ராஜூ, “நன்றி, வணக்கம்” என்று கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டார்.
இது தொடர்பாக, கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணியின் கூட்டத்தில் பீர் பரிமாறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த நிகழ்வுக்கு எதிராக பல தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ராணுவ வீரர்கள் பற்றி தனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அவர்களின் மனது பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறதாகவும் செல்லூர் ராஜு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "இந்தியாவை கண்ணை இமைப்பது போன்று பாதுகாக்கும் ராணுவ வீரர்களை நான் எப்போதும் மரியாதை செய்யும் நபர். அவர்களின் தியாகத்தை முழுமையாக மதிப்பவனும் நான். செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவின் பேரணி குறித்து கூறிய கருத்துகளை சில ஊடகங்கள் திரித்துப் போட்டுள்ளன.
நான் அதனை என் எக்ஸ் தளத்தில் உடனடியாக மறுத்து பதிலளித்துள்ளேன். இருந்தாலும், என் பேச்சால் ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்காக நேர்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் குடும்பமும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் குடும்பம் என்பதையும் இங்கு கூற விரும்புகிறேன்."
இதனையடுத்து, ஏற்பட்ட சர்ச்சையை சமாளிக்கும் வகையில் செல்லூர் ராஜு எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.