scorecardresearch

‘அவர் எங்களின் சகோதரர்’- திருமாவுக்கு வலைவீசும் செல்லூர் ராஜூ

அ.தி.மு.க. மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவின் பேச்சு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

Sellur Raju said that if Thirumavalavan joins the AIADMK alliance we will welcome it
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவர் இல்லை எனக் கூறிய செல்லூர் ராஜூ திருமா எங்கள் சகோதரர் போன்றவர் என்றார்.

அ.தி.மு.க. மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எங்கள் அம்மாவுக்கு (ஜெயலலிதா) நிகரான ஒரு தலைவர் இதுவரை இல்லை. இனியும் வரப் போவது இல்லை.
ஆகவே அவர் பேசிய உடன் சலசலப்புகள் ஏற்பட்ன. அதனடிப்படையில் சில கருத்துகள் பறிமாறப்பட்டன. அது தற்போது முடிந்துவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடியை பொறுத்தவரை தமிழை உலக அளவில் கொண்டு செல்கிறார். அவரை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து, “திருமாவளவன் தொடர்பான கேள்விக்கு, மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர் திருமாவளவன். அவர் எங்களின் சகோதரர் போன்றவர். அவரை கூட்டணிக்கு வரவேற்போம்” என்றார்.

ஆன்லைன் ரம்மி மசோதா தொடர்பான கேள்விக்கு, “ஆளுனர் சில விளக்கங்களை கேட்டுள்ளார். அதனை கொடுக்க வேண்டும். அது சம்பந்தமாக ஆழமாக எனக்கு தெரியாது” என்றார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தபோதெல்லாம் வெற்றியை ருசிக்கிறார். அவர் மதுரை வந்தபோதுதான் இரட்டை இலை கிடைத்தது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sellur raju said that if thirumavalavan joins the aiadmk alliance we will welcome it