Sellur Raju says CM Stalin indirect links with BJP: சிறுபான்மையினர் வாக்கு வங்கி பாதிக்காத வகையில், முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் மன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி இல்லை என சொல்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கூட அலங்கார ஊர்தி அணிவகுப்பு இல்லை, திமுக அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் ஒருவர் கூட மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்த வரவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசை திமுக அரசு குறை கூறி வருகிறது. தமிழ் மொழியை உலக அரங்குக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழர்களின் பெருமையையும், வரலாற்றையும் எடுத்துக்கூறிய ஒரே பிரதமர் மோடி தான். தமிழக கலாச்சாரத்தை பிரதமர் பிரதிபலித்தது வருகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார். தமிழகத்துக்கு எதிராக பிரதமர் நடத்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை. மேலும், சீன பிரதமரை அழைத்து வந்து தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்தவர் மோடி.
தமிழர்களின் பணியை உலகுக்கு எடுத்துக் காட்டும் விதமாக இந்திய அரசு செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்தவொரு நிலைபாட்டையும் எடுக்காது என திண்ணமாக கூறுகிறேன். பிரதமர் குறித்து கனிமொழி எந்த நிலைபாட்டில் கூறுகிறார் என தெரியவில்லை. சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதிக்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார். பிரதமர் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தந்துள்ளார்” என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.