Selvaperunthagai | Tamil Nadu Congress | கச்சத்தீவு விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பி உள்ளார்.
அதில், “கச்சத்தீவைப் பற்றி பேசும் மோடி அவர்களே!
உங்கள் ஆட்சியில்..
1. இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவலைப் பற்றி..
2. நாடாளுமன்றத்திற்குள் புகைக்குண்டு வீசியதைப் பற்றி.
3. புல்வாமா தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் பலியானதைப் பற்றி..
4. சட்டம் ஒழுங்கு சீரழிந்து பற்றி எரியும் மணிப்பூர் பற்றி..
5. பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து காணமல் போன ரபேல் ஆவணங்கள் பற்றி.. எப்போது பேசுவீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.
பிரதமர் மோடி, கச்சத் தீவு விவகாரத்தில் காங்கிரஸ் நாட்டுக்கு துரோகம் இழைத்தது என்று குற்றஞ்சாட்டினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக பதில் அளித்தார்.
அப்போது, “கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எனக் வினாயெழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“