தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, அடுத்த 3 மாதங்கள் தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் லண்டன் செய்து சர்வதேச அரசியல் குறித்த கல்வியை கற்க போகிறார் என்றும் அதுவரை லண்டனில் இருந்தபடியே கட்சிப் பணிகளை செய்யப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த செல்வ பெருந்தகை, “அமெரிக்க அதிபராக அண்ணாமலை முயற்சிக்கிறார்” என்று கிண்டலாக பதிலளித்தார்.
2024 மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்த நிலையில் இந்தத் தோல்வி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த சில மூத்தத் தலைவர்களும் வெளிப்படையாக பேசினார்கள். மேலும், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் எனவும் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அண்ணாமலை, பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி பெற்ற வாக்கு வங்கியை சுட்டிக் காட்டி பேசினார். மேலும், கடந்த காலங்களில் செல்ல முடியாத இடங்களில் கூட நாங்கள் வாக்குகள் பெற்றுள்ளோம்” எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“