பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பேசியபோது, காங்கிரஸால் எந்தப் பலனும் இல்லை எனக் கூறியுள்ளார். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது 1947-2016 வரை வாங்கிய கடன்கள் ரூ.55 லட்சம் கோடி.
கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி வாங்கிய கடன்கள் ரூ.117 லட்சம் கோடி. ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி கடனை இந்திய மக்கள் மீது சுமத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.1.30 லட்சம் வரை கடனை சுமத்தியுள்ளார். அவர் சொன்ன திட்டங்கள் இதுவரை செயல்படுத்தவில்லை.
வெளியுறவுக் கொள்கை திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. அம்ருத் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டு தற்போது மீண்டும் தொடங்கியதாக கூறியுள்ளார்.
திடீரென்று எம.ஜி.ஆர், ஜெயலிதா மீது அவருக்கு பற்று உள்ளது. இதே அண்ணாமலை ஜெயலலிதா மீது விமர்சனம் செய்துள்ளார்.
உண்மைக்கு புறம்பாக மோடி பேசிவருகிறார். இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மீது சிபிஐ, என்ஐஏ உள்ளிட்டவைகளை ஏவி வஞ்சிக்கின்றனர்.
அகிலேஷ் யாதவ்வுக்கும் இப்படிதான் சிபிஐ சம்மன அனுப்பியது” என்றார். முன்னதாக, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன என்றார்.
தொடர்ந்து, கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசுகையில், “மல்லிகார்ஜூன கார்கே இரு வாரங்களில் தமிழகம் வருகிறார்” என்றார்.
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைப்பது குறித்து பேசிய செல்வபெருந்தகை, “ஜி.கே. மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது” என்றார்.
கருணாநிதி நினைவிட நிகழ்ச்சியில் காங்கிரஸ் பங்கேற்காதது குறித்து பேசிய செல்வபெருந்தகை, “திமுக விழாலை புறக்கணிக்கவில்லை; அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் நிகழ்ந்த போராட்டத்தில் கூட என்னால் பங்கேற்க முடியவில்லை” என்றார்.
மேலும், கருணாநிதியை மிகவும் மதிப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் தாமரை மலருமா என்ற கேள்விக்கு, “தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் சொன்னார்கள், ஆனால் மலர்ந்ததா? அதுபோல்தான் அண்ணாமலை உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். ஒருபோதும் தமிழ்நாட்டில் தாமரை மலராது” என்றார்.
இதையடுத்து, காங்கிரஸ் சீட்டுக்காக கெஞ்சுகிறதா? என்ற கேள்விக்கு, “யாரை கெஞ்சினோம்; யாரையாவது கெஞ்சினோம் என சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.
தொடர்ந்து, 2014ல் உங்களை கடைசிவரை அலையவிட்டு சீட்டே கொடுக்கவில்லை என நிருபர் கூறினார்.
இதற்கு செல்வபெருந்தகை, “அதெல்லாம் கிடையாது, எங்கள் கட்சி கலை, கலாசாரம், பண்பாடு என அனைத்தையும் உள்வாங்கிய கட்சி. ஏற்றத் தாழ்வில்லாத கட்சி. பெரியண்ணன் மாதிரி எங்கள் கட்சி யாரையும் டீல் பண்ணாது. தோழமையோடு இருக்கிறோம், பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இது நடக்கவில்லை என்றால் தனியாக நின்றுவிட்டு போகிறோம். 2014ல் அவ்வளவுதான்” என்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டினர். தொடர்ந்து, செல்வ பெருந்தகை ஏங்க. 138 ஆண்டுகாலம் எத்தனை தேர்தலை இந்தக் கட்சி பார்த்திருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து, காங்கிரஸ் தனியாக தேர்தலை சந்திக்குமா? என்ற கேள்விக்கு அதனை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“