ஃபீஞ்சல் புயல் நிவாரண நிதியில் கூடுதல் தொகை வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி விவாதம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடலூரில் வியாழக்கிழமை கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை பார்வையிட்டார். முதலில் கடலூர் ரெட்டிச்சாவடி அடுத்த கரிக்கல் நகர் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அதை எடுத்து அவர்களுக்கு அரிசி போர்வை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை அடுத்து கடலூர் அடுத்த இரட்டை விலாகும் பகுதியிலும் கடலூர் ஆல்பேட்டை பகுதியிலும் ,நெல்லிக்குப்பம் அடுத்த வான் பாக்கம் பகுதியிலும் நிவாரண பொருட்களை வழங்கி பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக கரிக்கல் நகர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், “வெள்ள பாதிப்பு பகுதிகளை மாவட்ட நிர்வாகம் , அமைச்சர்கள், துணை முதல்வர் போர்ககால அடிப்படையில் மக்கள் பணி செய்தனர். நாங்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் காங்கிரஸ் கட்சியும் மக்களோடு மக்களாக சேர்ந்து வெள்ள நிவாரண பணிகளை செய்வதாகவும் மக்கள் அனைவரும் எங்களுக்கு ஏன் முன்னெச்சரிக்கை தகவலை சொல்லவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த பெருமளவு காட்டாற்று வெள்ளம் இயற்கை சீற்றம் இவை கவனிக்கின்ற துறை ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. ஏன் இதை மோடி அரசு தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்கவில்லை. ஏன் 50 செ.மீக்கு மேல் மழை பெய்யும் என சொல்லவில்லை. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் சார்பில் கேட்போம். உள்துறையும் மெட்ரோலஜி துறையும் மத்திய அரசு இடம் உள்ளது. வானிலையை கணித்து சொல்வது ஒன்றிய அரசிடம் உள்ளது. எதற்காக இந்த அறிவிப்பை செய்யாமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை.
ஃபீஞ்சல் புயல் கரையை கடந்துவிட்டது என வானிலை தெரிவிக்கிறது. ஒரு சில மணி நேரம் கழித்து மையமிட்டு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். தகவலை மக்களிடம் முறையாக தெரிவிக்காமல், மாறி மாறி தெரிவித்ததால் தான், இது போன்ற இழப்பு ஏற்பட்டது. வயநாட்டில் மண்ணோடு மண்ணாக பலரும் புதைந்தார்கள். அப்பொழுது ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எச்சரிக்கை செய்தோம் என்று தெரிவித்தார், கேரள மக்கள் காப்பாற்றாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள். ஆனால், இப்பொழுது நாங்கள் கேட்பது இதே ஒன்றிய அரசு ஏன் முன்கூட்டியே இந்த வானிலை பாதிப்புகளை குறித்து தமிழக அரசிடம் முறையாக தெரிவிக்கவில்லை,
தமிழக அரசை மத்திய அரசு கண்டும் காணாமல் விட்டுவிட்டதா, வரலாறு காணாத மழை வெள்ளத்தை போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து அமைச்சர்களை அனுப்பி மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி நடைபெற்ற பணிகள் சிறப்பாக இருப்பதாகவும் யார் யாருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து உரிய இழப்பீடு அளவு தருவார்கள். தாங்களும் அனைத்து மாவட்டங்களின் இழப்பீடுகளை குறித்த தகவல்களை தமிழக முதல்வரிடம் நாளை தெரிவிப்போம். இந்த நிவாரணம் போதுமனதாக இருக்காது. தற்போது கொடுத்துள்ள நிவாரணம் என்பது உடனடி நிவாரணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடு, மாடு, வீடு ஆகியவை சேதமடைந்தால் அதற்கேற்றவாறு உரிய தொகை தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி 9-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் வலியுறுத்து உள்ளது” நெறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“